அரசியல்,முதன்மை செய்திகள் காங்கிரசை தோற்கடிப்பதே எனது லட்சியம்-சீமான்

காங்கிரசை தோற்கடிப்பதே எனது லட்சியம்-சீமான்

Tamil,Tamil News,Tamil News paper,Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily,newspaper,Tamilnadupolitics,kollywood,Tamil Cinema

நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் தேர்தல் பிரச்சாரம் குறித்து, ம.தி.மு.க., பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களை சென்னையில் சந்தித்துப் பேசினார்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய போவதாக, நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் அரசு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. எனவே, ஈழத் தமிழர்களுக்கு எதிரான காங்கிரஸ் அரசை தோற்கடிப்பதே என்னுடைய லட்சியம் என்று சீமான் காரசாரமாக கூறியுள்ளார்.

மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களை போட்டியிடச் சொல்லி தான் கேட்டுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திரு.வைகோ அவர்களை சந்தித்த பின்பு, செய்தியாளர்களிடம் பேசிய சீமான் இவ்வாறு கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Comments are closed.