Atharvaa

செய்திகள், திரையுலகம்

முதல் படம் வெளிவரும் முன்பே ஹாட்ரிக் அடிக்கும் நடிகை!…

சென்னை:-பிரபு சாலமன் இயக்கும் கயல் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் ஆனந்தி. சில தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவருக்கு பிரபுசாலமன் படத்தில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. அந்தப் படத்தின் படப்பிடிப்புகூட முழுமையாக முடிந்திராத நிலையில் அடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் தானுகுமார் இயக்கும் பொறியாளன் படத்தில் ஹரிஸ் கல்யாண் ஜோடியாக நடிக்கிறார். அடுத்து தற்போது இயக்குனர் பாலா தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் அதர்வாவுடன் நடிக்கிறார். இதனை சற்குணம் இயக்குகிறார். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார். கோலிசோடா அருணகிரி இசை அமைக்கிறார்.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

தனுஷ்-நயன்தாராவுக்கு சிறந்த நடிகர், நடிகைக்கான விருது!…

சென்னை:-சிறந்த நடிகர், நடிகைகளுக்கு பிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது.இதில் நயன்தாராவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது. ‘ராஜாராணி’ படத்தில் நடித்ததற்காக இவ்விருதை பெற்றார். சிறந்த நடிகருக்கான விருதை ‘மரியான்’ படத்தில் நடித்த தனுஷ் பெற்றார். இதுபோல் ‘பரதேசி’ படத்தில் நடித்த அதர்வாவும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். ‘கடல்’ படத்தில் நடித்த கௌதம் கார்த்திக்கும், ‘நேரம்’ படத்தில் நடித்த நவீன் பாலியும் சிறந்த அறிமுக நாயகனுக்கான விருதுகளை பெற்றனர்.சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை நஸ்ரியா பெற்றார். ‘நேரம்’ படத்தில் நடித்ததற்காக இவ்விருது கிடைத்தது.’ராஜாராணி’யில் நடித்த சத்யராஜ், ‘பரதேசி’யில் நடித்த தன்சிகாவுக்கும் விருதுகள் கிடைத்தன. சிறந்த இயக்குனருக்கான விருதை பாலா பெற்றார். ‘பரதேசி’ படத்துக்காக இவ்விருது கிடைத்தது. சிறந்த படத்துக்கான விருது ‘தங்கமீன்கள்’ படத்துக்கு கிடைத்தது. ‘கடல்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ராஜீவ்மேனன் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை பெற்றார்.ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது கிடைத்தது. ‘மரியான்’ படத்தில் இசையமைத்ததற்காக இவ்விருதை பெற்றார்.’தங்க மீன்கள்’ படத்தில் ஆனந்தயாழை மீட்டுகிறாய் பாடலை எழுதிய நா.முத்துக்குமார் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார்.இந்த பாடலை பாடிய ஸ்ரீராம் பார்த்தசாரதிக்கு சிறந்த பாடகருக்கான விருது கிடைத்தது.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

29வது முறையாக பிலிம் பேர் விருது பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்!…

சென்னை:-61-வது தென்னிந்திய மொழிப் படங்களுக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.இதில் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான், மகேஷ் பாபு, ஹிந்தி நடிகை ரேகா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், முரளி கோபி, சத்யராஜ், சமந்தா, நயன்தாரா, அதர்வா, பூஜாகுமார், தன்ஷிகா, லட்சுமிராய், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், இயக்குனர் பாலா உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். விழாவில் தமிழின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார். ‘கடல்’ மற்றும் தனுஷ் நடித்த ‘மரியான்’ படங்களுக்கு சிறப்பாக இசையமைத்தமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. விழா மேடைக்கு வந்த ரஹ்மானிடம், இது உங்களுக்குக் கிடைக்கும் எத்தனையாவது பிலிம் பேர் விருது? என்று கேட்டதும், ஏ.ஆர்.ரஹ்மான் புன்னகைத்தவாறு இது எனக்குக் கிடைக்கும் 29-ஆவது விருது என்றார் .ரஹ்மானின் இந்த பதிலை கேட்டதும் அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது.

செய்திகள், திரையுலகம்

இயக்குனர் பாலாவின் செண்டிமென்ட்டால் அதிர்ச்சியில் வேதிகா!…

சென்னை:-பாலாவின் பரதேசி படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை வேதிகா. பெரிய டைரக்டரின் படவாய்ப்பு என்பதால், தனக்கு தமிழில் இந்த படமே திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்த்தார் வேதிகா. இந்நிலையில், சித்தார்த்-பிருதிவிராஜ் நடிக்கும் காவியத்தலைவன் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பின்னர் படங்களே இல்லை. கஷ்டப்பட்டு ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். திடீரென்று உள்ளே புகுந்த வெளுத்துக்கட்டு அருந்ததி அந்த பட வாய்ப்பை அபகரித்து விட்டார். இதனால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று புலம்பிக்கொண்டு நிற்கிறார் வேதிகா. அதோடு, பாலாவின் இயக்கத்தில் இதுவரை நடித்த அபிதா, லைலா, சங்கீதா, பூஜா என எந்த நடிகைகளும் அதன்பிறகு சினிமாவில் வளரவில்லை. ஓரிரு படங்களோடு காலியாகி விட்டனர். அதனால் டைரக்டர் பாலா படங்களில் நடித்த கதாநாயகிகளுக்கு ஏற்பட்ட அதே கதி நமக்கும் ஏற்படப்போகிறதோ என்று அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார் வேதிகா.

செய்திகள், திரையுலகம், முதன்மை செய்திகள்

நடிகர் தனுஷுக்கு பிலிம்பேர் விருது உறுதி!…

சென்னை:-பிரபல ஆங்கில இதழான பிலிம்பேர் பத்திரிகையின் தென்னிந்திய திரைப்பட விருது வழங்கும் விழா ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும்.அதன்படி இந்த வருடம் சென்னையில் வருகிற 12ம் தேதி நடைபெறவிருக்கிறது. தென்னிந்திய சினிமாவின் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் இந்த விழாவில், ராம் இயக்கி, தேசிய விருது பெற்ற தங்கமீன்கள் படம் அதிக எண்ணிக்கையிலான பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறது. சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த குணச்சித்திர நடிகை, சிறந்த பாடலாசிரியர், சிறந்த பின்னணிப் பாடகர் என ஐந்து பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. இந்த ஐந்து பிரிவுகளில் தங்க மீன்களுக்கு எத்தனை விருதுகள் கிடைக்கும் என்ற சஸ்பென்ஸில் இருக்கிறார் ராம்.இது ஒருபக்கமிருக்க, இந்த வருடத்துக்கான ஃபிலிம்பேர் பத்திரிகை விருது விழாவுக்கு பிராண்ட் அம்பாசடாராக தனுஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதன் காரணமாக சிறந்த நடிகர் விருது இந்தமுறை நிச்சயமாக தனுஷுக்குத்தான் என்று முன்னணி ஹீரோக்கள் சிலர் சக நட்சத்திரங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பிக் கொண்டிருக்கினறனர். அதுமட்டுமல்ல, அதர்வா, காஜல் அகர்வால், பிரியா ஆனந்த், அமலாபால், அனிருத் ஆகியோருக்கும் இந்த முறை விருது நிச்சயமாக கிடைக்கும் என்றும் பேசிக்கொள்கிறார்கள்.

செய்திகள், திரையுலகம்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுத்த ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீதிவ்யா மீண்டும் அவருடன் டாணா படத்தில் கைகோர்த்துள்ளார். இரண்டு பேருமே இந்த படத்தில் நெருக்கம் காட்டி நடித்துக்கொண்டிருக்கிறார்கள். அதோடு, முந்தைய படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த ஸ்ரீதிவ்யாவுக்கு இதில் மாடர்ன் கேர்ள் வேடம். அதனால், அதர்வாவுடன் நடித்துள்ள ஈட்டி படத்தை விடவும் இப்படத்தில் கவர்ச்சிக்கதவுகளை கூடுதலாக திறந்துவிட்டுள்ளார். மேலும், காதலை வெளிப்படுத்தும் ஒரு உருக்கமான காட்சியில் இருவரும் முத்தம் கொடுத்துக்கொள்வது போல் படமாக்கினாராம் இயக்குனர்.அப்போது, சிவகார்த்திகேயனுககு முத்தம் கொடுக்க ஸ்ரீதிவ்யா தயாராகி விட்டபோதும், சிவா தான், என் படத்தை இளசுகளாக பார்க்கிறார்கள். நான் முத்தம் கொடுத்தால் பின்னர் அவர்களும் அதை பின்பற்றுவார்கள். அதனால் அவர்கள் கெட்டுப்போவதற்கு நானே காரணமாகி விடுவேன் என்று மறுத்துள்ளார். ஆனபோதும், ஸ்ரீதிவ்யா விடவில்லையாம். காதலை சொல்ல முத்தம் கொடுப்பது ஒன்றும் தவறில்லை. நீங்கள் கொடுக்கவில்லை என்றால் நான் கொடுக்கிறேன் என்று சொன்னாராம். அதனால், டைரக்டருக்கு ரொம்ப சந்தோசமாக விட்டதாம். அதையடுத்து, ஸ்ரீதிவ்யாவே சிவகார்த்திகேயனுக்கு முத்தம் கொடுப்பதுபோன்று படமாக்கியிருக்கிறார். இந்த சேதி படத்தின் தயாரிப்பாளர் தனுசுக்கு சென்றபோது, ஸ்ரீதிவ்யாவுக்கு ஸ்பெசல் தேங்க்ஸ் சொல்லி மெசேஜ் பண்ணியிருக்கிறார்.

செய்திகள், திரையுலகம்

பார்ட்டி வைத்து சான்ஸ் பிடிக்கும் நடிகை பிரியா ஆனந்த்!…

சென்னை:-கதாநாயகியாய் வெற்றி பெற வெறும் திறமை மட்டும் போதாது என்பதை தெளிவாகப் புரிந்து வைத்துள்ளார் பிரியா ஆனந்த். அந்தப் புரிதல் காரணமாகவோ என்னவோ, தன்னுடன் நடிக்கும் ஹீரோக்களுடன் படம் முடியும்வரை நெருக்கமான உறவை மெயின்ட்டெயின் பண்ணுகிறாராம். தன்னுடன் நடிக்கும் இளம் ஹீரோக்களுக்கு கம்பெனி கொடுக்கும்விதமாக அவர்களுடன் அடிக்கடி பார்ட்டிக்கு சென்று கொண்டிருந்தார். இப்படி ஒவ்வொரு ஹீரோ உடன் வெளியே செல்வதில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிட்டதால், இதற்காகவே சென்னை ஹாரிங்டன் ரோட்டில் புதிய ப்ளாட் ஒன்றை வாங்கி இருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் இந்த ப்ளாட்டுக்கு வந்துவிடும் ப்ரியா ஆனந்த், அங்கிருந்தபடியே தன் நட்சத்திர நண்பர்களுக்கு அழைப்புவிடுக்கிறார்.அவர்கள் வந்த பிறகு விடிய விடிய பார்ட்டிதான். ப்ரியா ஆனந்தின் நட்பு வட்டத்தில் முதலிடத்தில் இருப்பவர் அதர்வா. ஏறக்குறைய தினமும் ப்ரியா ஆனந்தை சந்தித்துவிடுகிறார் அதர்வா. இவர் தவிர கௌதம் கார்த்திக், விக்ரம் பிரபு என ப்ரியா ஆனந்தின் நண்பர்கள் பட்டியல் நீள்கிறது.

செய்திகள், திரையுலகம்

அறிமுகப்படுத்திய இயக்குனரை ஓடவிட்ட நடிகை!…

சென்னை:-சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் மூலம் கோலிவுட் அறிமுகமானார் நடிகை ஸ்ரீதிவ்யா.தற்போது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுடன் பென்சில், சிவகார்த்திகேயனுடன் டாணா, விஷ்ணுவுடன் ஜீவா, அதர்வாவுடன் ஈட்டி, விதார்த்துடன் காட்டு மல்லி, புதுமுக நடிகருடன் நகர்ப்புறம் என மொத்தம் ஆறேழு படங்கள் அவர் கைவசம் உள்ளன. முதல் படத்தில் 50 ஆயிரம் மட்டும் வாங்கி கொண்டு நடித்த ஸ்ரீதிவ்யா இப்போது தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டாராம். தற்போது ஜி.வி.பிரகாஷுடன் அவர் நடிக்கும் பென்சில் படத்திற்கு ரூ.50 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம், தனது அடுத்த படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய ஸ்ரீதிவ்யாவை அணுகியிருக்கிறார். ஆனால் அவருடைய சம்பளத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடிவிட்டாராம். அவரிடமும் சம்பளமாக 50 லட்சம் கேட்ட நடிகை அறிமுகப்படுத்திய இயக்குனர் என்பதற்காக ஐந்து லட்சத்தை மட்டும் குறைத்துக்கொள்வதாக கூறியுள்ளார். மேலும் கால்ஷீட்டிற்காக பல மாதங்கள் காத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தாராம். இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்ராம், வேறு புதுமுக நடிகையை தேடி வருகிறார்.

செய்திகள், திரையுலகம்

ஹீரோக்களைக்கண்டு அலறும் ஸ்ரீதிவ்யா!…

சென்னை:-‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ நடிகையான ஸ்ரீதிவ்யா, தற்போது அரை டஜன் படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனால் அதையடுத்து எந்த படங்களுமே இன்னும் வெளிவராததால் அவர் மீதுதான பரபரப்பை காணவில்லை. ஆனால், திரையுலகில் அவருக்கு நல்ல ஆபர் இருந்து வருகிறது. காரணம், லட்சுமிமேனன், பிரியாஆனந்த், நந்திதா உள்ளிட்ட சில நடிகைகள் எக்கச்சக்கமாக கண்டிசன்கள் போட்டு வருகின்றனர். ஆனால், ஸ்ரீதிவ்யாவோ, சில படங்களில் நடிக்க கதையைகூட கேட்பதில்லை பெரிய டைரக்டர் என்றால் ஓ.கே சொல்லி விடுகிறார். அதோடு, படப்பிடிப்பில் தளத்துக்கு வந்து இருக்கிற இடமே தெரியாமல இருக்கும் அவர், கொடுக்கும் காஸ்டியூமை எந்த குற்றம் குறையும் சொல்லாமல் அணிந்து கொண்டு நடித்துக்கொடுக்கிறார். இதனால், அவரை வைத்து படம் பண்ணி வரும் டைரக்டர்களெல்லாம் ஸ்ரீதிவ்யாவை தங்களது செல்லப்பிள்ளை என்கிறார்கள். இதனால் ஸ்ரீதிவ்யாவுக்கு பிரபல ஹீரோக்களின் படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கியிருக்கிறது. ஆனால்,அப்படி தன்னை தேடி வரும் படங்களின் ஹீரோக்கள் தன்னை விட நல்ல உயரமாக வாட்டசாட்டமாக இருந்தால், அய்யோ இவர்கூட நான் எப்படி நடிப்பது. இவர் பக்கத்தில் நான் நின்றால் காணாமல் போய் விடுவேன் என்று அலறுகிறாராம் ஸ்ரீதிவ்யா. அதோடு, சிவகார்த்திகேயன், மாதிரியான இளவட்ட நடிகர்கள்தான் எனக்கு மேட்சாக இருப்பார்கள் என்று கூறும் அவர், அடுத்தபடியாக விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களுக்கும் நான் பொருத்தமாகவே இருப்பேன் என்று அவர்களுடன் நடிக்க தனக்கு இருக்கிற ஆர்வத்தையும் இந்த சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகிறாராம்.

செய்திகள், திரையுலகம்

மீண்டும் பாலாவுடன் இணையும் அதர்வா!…

சென்னை:-பாலா இயக்கத்தில் அதர்வா மற்றும் வேதிகா நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த படம் பரதேசி. இப்படம் 1930ம் ஆண்டுகளில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த உடை வடிவமைப்புக்கான தேசிய விருது இந்த படத்திற்கு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் பாலா ‘தாரை தப்பட்டை’ என்னும் படத்தை இயக்கிவருகிறார். அதுமட்டுமின்றி மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. இந்நிலையில் இயக்குனர் சற்குணம் இயக்கும் புதிய படத்தையும் பாலா தயாரிக்கவிருக்கிறார். இப்படத்தில் நாயகனாக அதர்வா தேர்வாகியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் பிற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை ஜூலை மாதம் தொடங்கவுள்ளனர்.

Scroll to Top