வா வா அன்பே அன்பே Vaa Vaa Anbe Anbe Lyrics in Tamil from Agni Natchathiram (1988)

Vaa Vaa Anbe Anbe Lyrics in Tamil:


வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே

உன் வண்ணம்
உன் எண்ணம் எல்லாமே
என் சொந்தம் இதயம்
முழுதும் எனது வசம்

வா வா அன்பே
அன்பே காதல் நெஞ்சே
நெஞ்சே

நீலம் கொண்ட
கண்ணும் நேசம் கொண்ட
நெஞ்சும் காலம்தோறும்
என்னை சேரும் கண்மணி

பூவை இங்கு சூடும்
பூவும் பொட்டும் யாவும்
மன்னன் எந்தன் பேரை
கூறும் பொன்மணி

காலை மாலை
ராத்திரி காதல் கொண்ட
பூங்கொடி ஆணை போடலாம்
அதில் நீயும் ஆடலாம் (2)

நீ வாழத்தானே
வாழ்கின்றேன் நானே

நீ இன்றி ஏது
பூ வைத்த மானே

இதயம் முழுதும்
எனது வசம்

வா வா
அன்பே அன்பே
காதல் நெஞ்சே நெஞ்சே

கண்ணன் வந்து
துஞ்சும் கட்டில் இந்த நெஞ்சம்
கானல் அல்ல காதல் என்னும்
காவியம்

அன்றும் இன்றும்
என்றும் உந்தன் கையில்
தஞ்சம் பாவை அல்ல பார்வை
பேசும் ஓவியம்

காற்றில் வாங்கும்
மூச்சிலும் கன்னி பேசும்
பேச்சிலும் நெஞ்சமானது
உந்தன் தஞ்சமானது (2)

உன் தோளில்
தானே பூமாலை நானே
சூடாமல் போனால்
வாடாதோ மானே
இதயம் முழுதும்
எனது வசம்

வா வா
அன்பே அன்பே
காதல்
நெஞ்சே நெஞ்சே

உன் வண்ணம்
உன் எண்ணம்
எல்லாமே
என் சொந்தம்
இதயம் முழுதும்
எனது வசம்

வா வா
அன்பே அன்பே
காதல்
நெஞ்சே நெஞ்சே

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

Scroll to Top