அரசியல்,செய்திகள்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா ?

பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா ?

பச்சையப்பன் கல்லூரி ரூட் தல பிரச்சனை, அரசியல் இருக்கிறதா ? post thumbnail image

சென்னை மாநகர காவல்த்துறை ஒரு வழியாக விழித்து வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது “இனிமேல் ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது. மீறி நடந்தால், மாணவர்களே ஆனாலும் சிறைதான்” என்று கடும் தொனியில் சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த இரு தரப்பு மாணவர்களிடையே ரூட் தல யார் என்பதில் பிரச்சனை வெடித்தது. கல்லூரி முடிந்து ஒரே பேருந்தில் மாணவர்கள் சென்றபோது, ரூட் தல விவகாரம் புகைச்சலை உருவாகியுள்ளது, இதில் இரு தரப்புமே சரமாரியாக மோதிக் கொண்ட படங்கள் திரைப்படங்களில் வரும் காட்சிகள் போல் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பேருந்தில் இருந்து இறங்கி முக்கியமான நடு சாலையில் ஓடிய மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் விரட்டி விரட்டி சென்று, அரிவாள், பட்டா கத்தி, போன்ற ஆயுதங்களால் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த சண்டையில் ஏழு பேருக்கு அரிவாள் வெட்டு ஏற்பட்டுள்ளது.

கைகளிலே ஆயுதங்களை வைத்துக் கொண்டு சாலையில் அங்கும் இங்கும் ஆவேசமாக ஓடிய மாணவர்களை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். காவல் துறைக்கு தகவல் பறந்ததும் வந்த காவல்த்துறை அதிகாரிகள் இரண்டு பேரை கைது செய்தனர். இந்த ரூட் தல பிரச்சனை பல வருடமாக பல முறை காவல்த்துறை கண்டித்தும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு மேலும் இந்த நடைமுறை பலனளிக்காது என்பதால் சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களை காவல்த்துறை உயர்அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை நடத்த முடிவு செய்தார்கள் அதன்படி, மாநிலக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையர் ஆலோசனை நடத்தினார். இதை போன்றே நந்தனம் கல்லூரி மாணவர்களுடன் அடையாறு துணை ஆணையர் பகலவன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காவல் இணை ஆணையர் சுதாகர், “இனிமேல் ரூட் தல என்ற முறையே இருக்கக் கூடாது. மீறி நடந்தால், வன்முறையில் ஈடுபடும் மாணவர்கள் மீது குண்டர் பாயும். இதுவரை அவர்களை மாணவர்கள் என்ற கோணத்தில் தான் நடவடிக்கை எடுத்துள்ளோம், ஆனால் இந்த நிலைமையே தொடரும் பட்சத்தில் மாணவராக இருந்தாலும்சரி, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

இன்னொரு முறை இப்படி மாநகர பஸ்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தால் பொது மக்கள் உடனடியாக 100-ஐ தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். அதேபோல, பஸ் கூரை மீது மாணவர்கள் ஏறினால் பஸ்ஸை எடுக்க கூடாது என்று டிரைவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மோதல்கள் ஏற்படும் வழித்தடங்களில் இனி தீவிரமாக கண்காணிக்கப்படும்” என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி