இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் பந்துகள் தரமானதாக இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் குற்றம்சாட்டியுள்ளார்.
” எஸ்ஜி டெஸ்ட் ” என கூறப்படும் பந்தை தான் தற்போது இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர்.இது முழுக்க முழுக்க இந்தியாவிலே கைகளில் தயாரிக்கபடும் பந்தாகும்.
அஸ்வின் இந்திய டெஸ்ட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் “எஸ்ஜி டெஸ்ட்” பந்து சரியில்லை என புகார் கூறினார். இந்த நிலையில் தற்போது கேப்டன் கோலியும் அஸ்வின் கூற்றை ஒப்புக் கொண்டு இந்திய பந்து சரியில்லை என கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் டியூக் வகை பந்துகளை அஸ்வின் பாராட்டியுள்ளார்.இவை இங்கிலாந்தில் தயாரிக்கப்படுபவை ஆகும் .வெஸ்ட் இண்டிசிலும் பயன்படுத்தப்படுகிறது.
இவை கைகளால் தயாரிக்கப்படுகிறது.மேலும், குக்கூபூரா வகை பந்துகள் ஆஸ்திரேலியாவில் மெஷின் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
பந்துகள் குறித்து கோலி கூறுகையில் “”டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஏற்ற பந்து “ட்யூக்” பந்துதான். ஒரு சூழ்நிலை வந்தால், நான் ட்யூக் பந்து தான் உலகம் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என கூறுவேன்.
காரணம், அந்த பந்து போட்டியின் எந்த நேரத்திலும் ஒரே மாதிரியாக செயல்படுகிறது” என கூறினார்.
கேப்டன் கோலியே கூறிவிட்டதால் பந்து மாற்றப்படும் என தெரிகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி