சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் என்ற குற்றச்சாட்டு உள்ளது.. சூடாவது உண்மைதான் என்றாலும் வெடிக்குமா என்பது கேள்விக்குறிதான். சில ரெட்மி மொபைல்கள் வெடித்த சம்பவங்கள் ஏற்கனவே நிகழ்ந்துள்ளன. இந்நிலையில், ஒருவர் அவருடைய நண்பரின் Mi A1 ஸ்மார்ட்போன் சார்ஜ் ஏறும்போது வெடித்ததாகத் தகவலைப் சியோமி வாடிக்கையாளர் Forumஇல் பதிவிட்டுள்ளார்.
“எனது நண்பர் தூங்கும்போது Mi A1 ஸ்மார்ட்போனை அருகில் வைத்திருந்தார். அது வெடித்துச் சிதறியது. வெளிப்புறத்தில் கவர் மட்டும் இல்லையென்றால் இந்த வெடிப்பின்போது அவர் அதிகமாகக் காயம் அடைந்திருக்கக்கூடும். அந்த மொபைலை வாங்கி எட்டு மாதங்கள் ஆகியும் இதற்கு முன்பு வரை எந்த பிரச்னையும் ஏற்படவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே யாரும் Mi A1 ஸ்மார்ட்போனை அருகில் வைத்து உறங்க வேண்டாம் என எச்சரிக்கை செய்திருக்கிறார். ஷியோமி நிறுவனம் இந்தச் சம்பவத்தைப் பற்றி விசாரித்த பிறகே இது உண்மையாகவே நடந்ததாஎன்று தெரியவரும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி