இந்தியா ரஷ்யாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்களை வாங்கி வருகிறது.விண்ணில் சென்று எதிரிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளையும் வாங்கவுள்ளது.எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக உள்ளது. இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று இந்தியா வந்துள்ளார். இந்த ஒப்பந்தம் 36 ஆயிரம் கோடி ரூபாயில் போடப்பட உள்ளது.சிரியாவில் 2014 ரஷ்யா அத்துமீறியதை அடுத்து, அந்த நாட்டிடம் ஏவுகணைகளை வாங்கி கூடாது என்று அமெரிக்க நட்பு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தது. அதையும் மீறி வாங்கினால் அந்த நாடுகளின் மீது பொருளாதார தடை விதிக்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்து போட்டுள்ளது.இந்த நிலையில் இந்தியா மீது ஒப்பந்தத்தின் அடிப்படையில் தானாக பொருளாதாரா தடை விதிக்கப்படும். அமெரிக்க இன்று காலையே இதற்கான எச்சரிக்கையை விடுத்து இருக்கிறது.
உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு தவிர்க்க முடியாதது ஆகும்.இந்தியா மீது தடை வந்தால்,பாதிக்க படப்போவது அமெரிக்கா தான் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.இது அறியாமல் டிரம்ப் காமெடி செய்து வருகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி