தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ளது. இதனை இந்திய கிரிக்கெட் வீரர்கள் புறக்கணித்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது. தேசிய கிரிக்கெட் அகாடமி இந்திய கிரிக்கெட் வீரர்களின் உடல்நிலை மற்றும் தகுதி பற்றி பரிசோதித்து, மேல் சிகிச்சை போன்றவற்றில் உதவ வேண்டும். ஆனால், அங்கு நடைமுறைகள் சரியாக இல்லை என்பதால், பல இந்திய கிரிக்கெட் வீரர்கள், வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்கள் அங்கே செல்லாமல் தவிர்த்து வருகிறார்கள் என தெரிகிறது.
முக்கியமாக வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் வீரர்கள் அடிக்கடி காயமடைகிறார்கள்.இதனால் ,பிசிசிஐ வீரர்கள் உடல் நலனில் என்ன அக்கறை கொண்டுள்ளதா என்ற கேள்விகள் எழுகின்றன .இந்தியா ஏ அணியின் பிளேயர் ஒருவர் இங்கு சிகிச்சை சரியில்லாதால் தனது ஐபிஎல் அணி உதவியுடன் வெளிநாடு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.இந்திய அணி வீரர் ஒருவரும் இங்கு செல்வதை தவிர்த்துவிட்டு,தனியார் மருத்துவமனையை நாடினாராம்.தேசிய கிரிக்கெட் அகாதமி கூப்பிட்டும் பதில் இல்லயாம்.கோடிகளில் வருமானம் வரும் பிசிசிஐ ஏன் இதில் சொதப்புகிறது என்று தெரியவில்லை.இதனால் பல வீரர்கள் அதிருப்தியில் உள்ளார்களாம்.சர்ச்சைக்குரிய யோ யோ டெஸ்ட்ம் இங்குதான் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி