மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு ,விஜய் சேதுபதி ,அரவிந்த் ஸ்வாமி,அருண் விஜய் நடித்து,ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ” செக்க சிவந்த வானம்” இன்று வெளியாகியுள்ளது .லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரித்துள்ளனர். பர்ஸ்ட் லுக் ,ட்ரைலர் வெளியானது முதலே மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது .மணிரத்னம் மீண்டும் ஆக்ஷன் பாதைக்கு திரும்பியுள்ளது ரசிகர்களை முதல் ஷோ போக தூண்டியது .பிரகாஷ்ராஜின் மகன்களுக்கு இடையே நடக்கும் அதிகார போட்டியே படம் . விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி .ஒவ்வருவரும் போட்டி போட்டு நடித்துள்ளார் .அதுவும் விஜய் சேதுபதி அப்லாஸ் அள்ளுகிறார் .சிம்பு பட்டையைக்கிளப்பியுள்ளார் .திரையரங்கினில் சிம்பு ரசிகர்களின் கரகோசத்தை கட்டுப்படுத்தவே முடியவில்லை .இத்தனை நடிகர்களை வைத்து திரைக்கதையில் அனைவருக்கும் இணையான பாத்திரத்தை வழங்கியுள்ளார் மணிரத்னம் .வசனங்கள் வழக்கமான மணிரத்னம் பாணி .ஆனால் இந்த படத்தில் கொஞ்சம் கம்மி . தனது ஆட்டத்தை விட்டு வெளியே வந்து அடித்து ஆடியுள்ளார் மணிரத்னம்.மணிரத்னம் படத்துலேயே தனித்து கமர்ஷியலாக தெரிகிறது .வெகு நாட்கள் கழித்து இப்படியொரு படம் தந்த மணி சாருக்கு நன்றி.
சந்தோஷ் சிவன் கேமரா அழகியல் .மணிரத்னம் படத்திற்கு மட்டும் தனியாக இசையமைப்பார் போல ஏ.ஆர்.ரஹ்மான், பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்துத் உள்ளன .பின்னணி இசை படத்துக்கு பலம் கூட்டுகிறது .சில பாடல்கள் கட் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தும் மணிரத்னம் படம் இந்த “செக்க சிவந்த வானம் ” .படம் நிச்சயமாக வெற்றிபெறும் .
ரேட்டிங் : 3.5 /5 .
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி