கணவன் அல்லது மனைவி கள்ளத்தொடர்பில் இருந்தால் விவாகரத்து கோரலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவை நீக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பினை வழங்கியுள்ளது.அதன்படி கள்ளத்தொடர்பு கிரிமினல் குற்றமில்லை எனவும் தீபக் மிஸ்ரா தலைமையிலான ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் கூறியுள்ளது.ஆணும் பெண்ணும் கள்ளதொடர்பு வைத்துக்கொண்டால் ,அவர்களுக்கு உரிய வயது இருந்தால் குற்றமில்லை.ஆனால் ,ஆணுக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தாலோ, பெண்ணுக்கு ஒரு ஆணுடன் தொடர்பு இருந்தாலோ அவரை திருமணம் செய்தவர் விவாகரத்து கோரா உரிமையுள்ளது.இதனை வைத்து திருமணம் செல்லாது என அறிவிக்க கோரலாம் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர் .
இந்திய தண்டனை சட்டம் 497வது பிரிவின் படி, கள்ளத்தொடர்பில் இருக்கும் ஆணுக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், பெண்ணுக்கு தண்டனை ஏதும் கிடையாது.இதனை தற்போது உச்சநீதிமன்றம் ரத்துசெய்துள்ளது .
இதுகுறித்து பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்களை கூறிவருகின்றனர் .அதில் பெரும்பாலும் கிண்டல் ,கேலி வகையான கருத்துகளே உள்ளன .இருப்பினும் தீர்ப்புக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் தெரிவிக்கபடுகின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி