கடந்த 2006ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் , அரசு பதவிகளில் வழங்கப்படும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு பின்பற்ற தேவையில்லை ,அந்த வகுப்பினரின் பின் தங்கிய நிலை ,போதிய வாய்ப்பு இல்லாமை மற்றும் திறமை அடிப்படையில் பணி உயர்வு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் அரசியல் சாசன பெஞ்ச் கூறியிருந்தது.இதற்க்கு எதிர்ப்பு எழுந்தது.இதனை எதிர்த்து வழக்குகளும் தொடரப்பட்டன .மத்திய அரசும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக இருந்தது.இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, குரியன் ஜோசப், ரோஹின்டன் நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் இந்து மல்ஹோத்ரா அடங்கிய பெஞ்ச் விசாரித்தது .
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது .அதில் ,2006 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு உறுதிப்படுத்தபட்டது .இருப்பினும் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன .அதன்படி ,வேண்டுமென்றால் மத்திய,மாநில அரசுகள் இடஒதுக்கீட்டினை வழங்கி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது .வேலைக்கு எடுக்கும்போதே இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது,இந்த வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கும் மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும் பதவி உயர்வுக்கு ஒட்டுமொத்த நாட்டின் எஸ்சி, எஸ்டி எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக்கொள்ள கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.இந்த தீர்ப்பானது SC /ST பிரிவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .ஏற்கனவே ஐஐடி உள்ளிட்ட இடங்களில் 80% உயர் வகுப்பினரே உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர் .இந்த தீர்ப்பின் மூலம் SC/ST பிரிவினர் இனி உயர் பதவிகளில் அமர முடியுமா என அவர்கள் ஐயம் எழுப்பியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி