ஈரான் மீது அமெரிக்கா பல பொருளாதார தடைகளை விதித்து வருகிறது .இதனை எதிர்த்து அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்க ஐந்து நாடுகள் முடிவுசெய்துள்ளன .ஜெர்மனி, ரஷ்யா, சீனா,இங்கிலாந்து, பிரான்ஸ், ஈரான் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர் சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்றது.இதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதில் ஐந்து நாடுகளும் ஒப்பந்தம் ஒன்றினில் கையெழுத்திட்டும் உள்ளன .அதன்படி, ஈரான் உடனான வர்த்தகம் தொடரும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் கூறினார்.கடந்த 2016ஆம் ஆண்டு ஒபாமா அமெரிக்கா அதிபராக இருந்த போது ஈரான் ,ரஷ்யா உள்ளிட்ட 6 நாடுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது .அதில் அணுசக்தியினை ஆக்கபூர்வமாக மட்டுமே பயன்படுத்துவோமென்று ஈரான் உறுதியளித்திருந்தது .அதனால் ஈரான் மீதிருந்த பொருளாதார தடையும் நீக்கப்பட்டன .டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து ,அதனை ரத்து செய்தார் .பழையபடி பொருளாதார தடைகளும் விதித்து வருகிறார் .
ஆனால் பிற நாடுகள் ஈரானுடன் வர்த்தகத்தை தொடர்ந்து வருவதுடன்,ஒப்பந்தத்தையும் காத்து வருகின்றன.
இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் “ஃபெடரிகா மொஜர்னி கூறும்போது, “ஈரானுடன் ஏற்றுமதி செய்வது தொடர்பாக செலுத்தப்படும் பணம். ஈரானுடன் சட்டப்பூர்வமான வர்த்தக்கத்தை தொடருவதற்கு உதவும் பொருளாதார இயக்குனர்களுக்கு உதவிகள் குறித்து உத்தரவாதம் அளிக்க சிறப்பு வழிகளை உருவாக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுதுள்ளது .இரானிடம் எண்ணெய் வாங்க முடியாததால் இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்துகொண்டே வருவது குறிப்பிடத்தக்கது .
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி