அப்போது அமெரிக்க அரசாங்கம் குறுக்கிட்டு, ஒருவர் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடிக்கும் அதிநவீன சாதனம் ராம்சி என்னும் பெண்ணிடம் இருப்பதாகவும், அவள் தற்போது தீவிரவாதியின் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அவளை மீட்டுத் வந்தால் அந்த சாதனத்தின் உதவியுடன் ஜேசன் சாத்தமை பிடித்து தருகிறோம் என்று கூறுகிறது.அதன்படி, வின் டீசல் தன் குழுவுடன் தீவிரவாதியின் பிடியில் இருக்கும் ராம்சியை மீட்டு, ஜேசன் சாத்தமை அழித்தானா? இல்லை ஜேசன் சாத்தம் வின் டீசல் குழுவை அழித்தானா? என்பதை சீறிப் பாயும் கார் ரேசுடன் கூடிய ஏகப்பட்ட ஆக்ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் முதல் பாகத்தில் இருந்து கடைசி பாகம் வரை விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருக்கும். அதேபோல் 7ம் பாகத்திலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. ஒரு நிமிடம் கூட சோர்வடைய வைக்காமல் ஆக்ஷன் காட்சிகள் படம் முழுவதும் நிரம்பியிருக்கின்றன. திரைக்கதையும் காட்சியமைப்பும் படத்திற்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது. மேலும் விமானத்தில் இருந்து கார் விழும் காட்சி (பாரா டைவிங்), அபுதாபியில் கட்டிடங்களுக்கிடையே பாயும் கார், ரோட்ரிக்ஸின் அபுதாபி சண்டை, ஆளில்லா விமானத்தை தாக்கி அழிக்கும் ஜான்சன், பாதாளத்தில் சரியும் பஸ்ஸில் இருந்து தாவும் பால் வாக்கர்… என ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப சுவாரஸ்யம் குறையாமல் விறுவிறுப்பான எடிட்டிங் மூலம் படம் நிமிர்ந்து நிற்கிறது.
குறிப்பாக அபுதாபியில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்களுக்கு நடுவே செல்லும் கார் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமைந்திருக்கிறது. படத்தின் முதல் நிமிடம் முதல் இறுதிக்காட்சி வரை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் அளவுக்கு படத்தின் காட்சிகள் வேகமாக செல்கின்றன.இதில் நடித்துள்ள அனைவரின் நடிப்புத்திறனைப் பற்றி விமர்சிக்கத் தேவையில்லை என்னும் அளவுக்கு அனைவரும் அவரவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களை கனகச்சிதமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். ஆறாவது படத்துடன் இயக்குனர் ஜஸ்டின் லின் விலக, புதிதாக வந்த ஜேம்ஸ் வான் இந்த படத்தின் மூலம் தனி முத்திரை பதித்து விட்டார் என்றே சொல்லலாம்.
பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் அனைத்து பாகத்திலும் இடம் பெற்ற பால் வாக்கரின் கடைசிப் பாஸ்ட் சீரிஸ் இது. பால் வாக்கர் எதிர்பாராத விபத்தில் இறந்தபொழுது இந்த பாகம் வராது என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இப்படம் பால் வாக்கர் படமாக அமைந்திருக்கிறது. படம் முடித்ததும், பாலுக்காக சமர்ப்பணம் என்று டைட்டில் வரும்போது அது படக்குழுவினருக்கு மட்டுமல்ல, ரசிகர்கள் அனைவருக்கும்தான் என்று நினைக்க வைக்கிறது.படத்தின் கடைசிக் காட்சியில் உள்ள சென்டிமென்ட் காட்சியைப் பார்க்கும் போது தமிழ் படம் பார்க்கிற உணர்வு ஏற்படுகிறது.
மொத்தத்தில் ‘பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ ஆக்சன் டீரிட்……………
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே