பின்னர் தன்னுடைய கணவருக்கு இருக்கும் தாழ்வு மனப்பான்மையை போக்க, அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்காக டாக்டரிடம் செல்லலாம் என்று சுமா கூறினார். இதற்கு அபிஷேக் மறுத்து விட்டார். இதனால் தனது கணவர் குறித்து, அவரது பெற்றோரிடமும், உறவினர்களிடம் கேட்டபோது யாரும் சரியான பதிலை சுமாவுக்கு சொல்லவில்லை. இதனால் தன்னுடைய கணவரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள சுமா முடிவு செய்தார்.இதற்காக அக்கம் பக்கத்தில் வசிப்பவரிடம் முதலில் விசாரித்தார். அப்போது அவர்கள் ‘‘நீங்கள் வீட்டில் இல்லாதபோது உங்களது வீட்டிற்கு ஆண்கள் அடிக்கடி வந்து செல்கிறார்கள்’’ என்று கூறினர். இதுபற்றி கணவர் அபிஷேக்கிடம் சுமா கேட்டார். அப்போது அவர், தொழில் மற்றும் வேலை விஷயமாக பல்வேறு ஆண்கள் வீட்டிற்கு வருகிறார்கள், வேறு ஒன்றும் இல்லை என்று தெரிவித்து விட்டார். என்றாலும், கணவர் மீது சந்தேகம் அடைந்த சுமா, தன்னுடைய வீட்டு அறை முழுவதும் ரகசிய கண்காணிப்பு காமிராக்களை பொருத்தினார். பின்னர் அவர் ஒரு வாரம் தன்னுடைய சொந்த ஊரான தும்கூருக்கு புறப்பட்டு சென்று விட்டார்.
தும்கூரில் இருந்து பெங்களூருக்கு திரும்பிய சுமாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன்னுடைய வீட்டில் பொருத்தி வைத்திருந்த கண்காணிப்பு ரகசிய காமிராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தபோது அதிர்ச்சி அடைந்தார். அந்த காட்சிகளில் தனது கணவர் ஆண்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதோடு தனது கணவர் ஓரினசேர்க்கையாளர் என்பதும் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து இருப்பதையும் அறிந்து அதிர்ந்தார். இதையடுத்து, காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை சி.டி.யில் பதிவு செய்து இந்த ஆதாரத்துடன் கடந்த 20-ந் தேதி கணவர் அபிஷேக் தன்னுடன் தாம்பத்ய உறவு கொள்வதில்லை என்றும் பிற ஆண்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாகவும் ஓரினசேர்க்கையாளரான அவர் தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும் இதற்கு அவரது பெற்றோரும் உடந்தை என்றும் மல்லேசுவரம் போலீசில் புகார் செய்தார். மேலும் தனது கணவர் ஓரின சேர்க்கையாளர் என்பதற்கான ஆதாரமாக தனது வீட்டில் ரகசியமாக பதிவு செய்த காட்சிகள் அடங்கிய சி.டி.யையும் போலீசாரிடம் சுமா சமர்ப்பித்தார். இந்திய தண்டனை சட்டம் 377 பிரிவின்(இயற்கைக்கு மாறாக உறவு கொள்வது) கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கை கைது செய்தார்கள். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த சம்பவம் பற்றி துணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் கூறுகையில், பல் டாக்டர் சுமா கொடுத்த புகாரின் பேரில் மல்லேசுவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் அபிஷேக்கை கைது செய்து உள்ளனர். அவர் மீது 377 சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் அபிஷேக்கின் நிலைமையை தெரிந்து கொண்டே, அவரது பெற்றோர் சுமாவுக்கு திருமணம் செய்து வைத்து ஏமாற்றினார்களா? என்பது தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, என்றார்.இதற்கிடையில், சுமா கொடுத்த புகாரின் பேரில் அபிஷேக் மீது 377 சட்டப்பிரிவு கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த சட்ட விதிப்படி அபிஷேக்கு ஆயுள் தண்டனை வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது.இந்நிலையில், அபிஷேக் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு எதிராகவும், அபிஷேக்கு ஆதரவாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கருத்துகளை பதிவு செய்திருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே