தமிழகத்தில் பாரதீய ஜனதாவுக்கு தற்போது 10 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சிக்கு 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க திட்டமிட்டு இருக்கிறோம். தமிழக அரசு ஆவின் பால் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி இருக்கிறது. இதை எதிர்த்து வருகிற 31ம் தேதி சென்னையில் பாரதீய ஜனதா போராட்டம் நடத்த இருக்கிறது. அதைத் தொடர்ந்து நவம்பர் முதல் வாரத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெறும். பால் விலை உயர்வை தமிழக அரசு உடனே திரும்பப் பெறவேண்டும். ஆவின் நிறுவனம் வணிக நோக்கில் செயல்படக்கூடாது. சேவை நோக்கில் செயல்படவேண்டும். கூட்டணியில் இருப்பவர்கள் கருத்து கூற சுதந்திரம் இருக்கிறது. அதனை தெளிவுபடுத்தும் கடமை எங்களுக்கு இருக்கிறது. சில கருத்துகளை கூறுவதனால் கூட்டணி உடைந்து விட்டது என்று கூறமுடியாது. டெல்லியில் பிரதமரின் விருந்துக்கு தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்படாததால் எங்களுக்குள் ஏதோ விரிசல் வந்துவிட்டது என்பது போல சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். அது தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் என்பதை தெளிவுபடுத்துகிறோம்.
ரஜினிகாந்தை நாங்கள் வலியப் போய் அழைக்கவில்லை. தேசிய எண்ணம் கொண்ட திரைப்பட கலைஞரான அவர் வந்தால் நன்றாக இருக்கும் என்றுதான் எங்கள் கருத்துகளை பகிர்ந்துகொண்டோம். அதற்காக அவரை மட்டுமே முற்றாக நம்பி கட்சியை நடத்தவில்லை என்பது தெளிவான உண்மையாகும். ரஜினிகாந்த் மட்டுமல்ல. தேசிய எண்ணம் கொண்ட மற்ற நடிகர்கள், கலைஞர்கள், மருத்துவர்கள் என்று எந்தத்துறையில் இருந்தாலும் அவர்கள் எங்களுடன் இணைய வேண்டும் என்று விரும்புகிறோம். நரேந்திர மோடியின் தலைமை, எங்கள் கொள்கை, எங்கள் தொண்டர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை நம்பித்தான் எங்கள் கட்சி இருக்கிறது. தமிழகத்தில் பாரதீய ஜனதா மிகப்பெரும் சக்தியாக மாறி அடித்தட்டு மக்களின் ஆதரவுடன் 2016ல் பெரியவெற்றியை பெற்று ஆட்சியை பிடிக்கும். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே