புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஐதராபாத் போலீசார்!…

ஐதராபாத்:-தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு ஏழை ஆட்டோ டிரைவரின் மூத்த மகன் சாதிக். 4–ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன்.படிப்பில் படுசுட்டியான சாதிக்குக்கு நன்றாக படித்து பெரிய போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்ற ஆசை.உறவினர் ஒருவர் போலீஸ்காரராக இருப்பதால் காக்கி சட்டை அணிந்து அவர் மிடுக்குடன் நடந்து செல்வதை பார்க்கும் போதெல்லாம் அவரை அழைத்து நானும் ஒருநாள் இப்படி போலீஸ் அதிகாரியாக வருவேன் என்பான்.அவரும் தட்டிக்கொடுத்து பாராட்டுவார். உன்னால் நிச்சயம் போலீஸ் அதிகாரியாக வரமுடியும். முதலில் நன்றாகபடி என்று பெற்றோரும் உற்சாக மூட்டினார்கள். மனதில் துளிர்விட்ட போலீஸ் அதிகாரி கனவுடன் அந்த இளந்தளிர் தனது பள்ளி பயணத்தை தொடர்ந்தது.

ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் திடீரென்று உடல் நலம் பாதித்த சாதிக்கை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவனது உடல் நிலையை பரிசோதித்த டாக்டர்கள் அவனை ரத்த புற்றுநோய் தாக்கி இருப்பதை கண்டு பிடித்தனர்.கேள்விப்பட்டதும் பெற்றோர்கள் நொறுங்கி போனார்கள். தங்கள் அன்பு மகனை மரணம் நெருங்கி கொண்டிருப்பதை நினைத்து தவித்தார்கள்.எத்தனை ஆசை…? எத்தனை கனவுகள்…? அத்தனையும் கானல் நீராகி விட்டதே என்று மொத்த குடும்பமும் கண்ணீரில் மிதக்கிறது.
தனது வாழ்க்கையின் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சாதிக்கிடம் அவனது கடைசி ஆசையை மருத்துவர்கள் கேட்டனர்.அப்போது அவன் சொன்ன வார்த்தைகள் ‘நான் போலீஸ் கமிஷனராக ஆசைப்பட்டேன். ஆனால்….’ என்று அவன் முடிப்பதற்குள் அருகில் நின்ற மருத்துவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களின் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்தது.இவ்வளவு அற்ப ஆயுளில் அவன் வாழ்க்கை பயணம் முடியும் என்று யார் கண்டது? மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று! இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று! அதுதானே உண்மை.

முடியப்போகும் சாதிக்கின் வாழ்க்கையில் அவனது கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஐதராபாத்தில் இயங்கும் ‘மேக் ஏ விஷ்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு சாதிக்கின் நிலைமையும், அவனது கடைசி ஆசையையும் விவரித்தனர்.உடனே தொண்டு நிறுவனத்தினர் போலீஸ் கமிஷனரை அணுகி விவரத்தை கூறினார்கள்.அந்த சிறுவனின் ஆசையை நிறைவேற்றி வைக்க போலீஸ் கமிஷனர் மகேந்திரரெட்டி முன்வந்தார். சிறுவன் சாதிக்குக்கு போலீஸ் சீருடை, தொப்பி தயாரானது. நேற்று காலை 10 மணி… கமிஷனராக பதவி ஏற்க சீருடை அணிந்து வீட்டில் சாதிக் தயாராக இருந்தான்.சிவப்பு சுழல் விளக்கு பொருத்திய போலீஸ் வாகனம் சாதிக் வீட்டு முன்பு வந்து நின்றது.காவலர் ஒருவர் கார் கதவை திறந்து விட மிடுக்காக காரில் ஏறி அமர்ந்தான் சாதிக். ஐதராபாத் நகர வீதியில் கமிஷனராக… மனதுக்குள் கற்பனையில் மிதந்தபடி சாதிக் பயணித்தான்.கமிஷனர் அலுவலகம் வந்து இறங்கியதும் காவலர் ஒருவர் ‘சல்யூட்’ அடித்து வரவேற்றதும் பதிலுக்கு ‘சல்யூட்’ அடித்து மரியாதையை ஏற்றுக் கொண்டான்.போலீஸ் அதிகாரிகள் கமிஷனர் அலுவலகத்துக்குள் அழைத்து சென்றனர். அங்கு தயாராக இருந்த போலீஸ் கமிஷனர் மகேந்திரரெட்டி பூங்கொத்து கொடுத்து சாதிக்கை வரவேற்றார். பின்னர் கமிஷனரின் இருக்கையில் சாதிக்கை அமர வைத்தனர்.

அந்த அறையில் நிரம்பி இருந்த நிருபர்களும் புதிய கமிஷனரை மகிழ்விக்க புதிய கமிஷனர் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? என்று கேள்வி கேட்டனர்.அதற்கு சற்றும் தாமதிக்காமல் ரவுடியிசத்தை ஒழிப்பேன். சட்டம் – ஒழுங்கு பாதுகாக்கப்படும். போக்குவரத்து சீராக இருக்கும். நாள் முழுவதும் காவலர்கள் விழிப்புடன் இருப்பார்கள். ஈவ்–டீசிங்க்கு இடம் கிடையாது என்று படபடவென்று பதிலளித்தான்.
அதோடு உதவி கமிஷனர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் இந்த விசயங்களில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டான்.பின்னர் தயாராக வைத்திருந்த சில கோப்புகளிலும் கையெத்திட்டான். அதை தொடர்ந்து கமிஷனர் அலுவலகத்தை சுற்றி காட்டினார்கள்.ஒரு நாள் கமிஷனராக வலம் வந்த சாதிக்கின் உள்ளத்தில் தனது வாழ்க்கையின் லட்சியம் நிறைவேறி விட்டதற்கான பூரிப்பு. சந்தோசத்தில் சிரித்து கொண்டே அனைவரிடமும் உரையாடினான்.இதை பார்த்து கொண்டிருந்த ஒவ்வொருவரின் இதயமும் கண்ணீர் வடித்தது. எத்தனை ஆசை கனவுகள்… இந்த சிறுவனுக்கு? அநியாயமாய் பாதியிலே கருகி போகிறதே…வாழும் காலமாவது வசந்த காலமாக இருக்கட்டும் என்று பொங்கி வரும் கண்ணீரை அடக்கி கொண்டு ஒவ்வொருவரும் அவனை மகிழ்வித்து கொண்டிருக்கிறார்கள். இந்த வயதில் எவ்வளவு பெரிய கனவு கண்டுள்ளான். கடவுள் அவனது ஆசையை நிறைவேற்றி வைக்கவில்லை. எங்களால் முடிந்த இந்த உதவியின் மூலம் அவனுடைய ஆசையை நிறைவேற்றிய ஆத்ம திருப்தி எங்களுக்கு என்றார் கமிஷனர் மகேந்திர ரெட்டி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago