இந்திய தரப்பில் 516 பேர் கொண்ட குழுவினர் தென்கொரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 163 பயிற்சியாளர் மற்றும் அதிகாரிகளும் வீரர்களுடன் சென்றுள்ளனர். குவாங்சூவில் 2010–ம் ஆண்டு நடந்த முந்தைய ஆசிய போட்டியில் இந்தியா 14 தங்கம் உள்பட 65 பதக்கங்களை கைப்பற்றியது. அப்போது இந்தியா தரப்பில் 626 பேர் கலந்து கொண்டனர்.ஆனால் இந்த தடவை எண்ணிக்கையை மத்திய விளையாட்டு அமைச்சகம் வெகுவாக குறைத்துக் கொண்டு விட்டது. நீச்சல், தடகளம், வில்வித்தை, பேட்மிண்டன், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கனோயிங் (ஒரு வகை படகு போட்டி), சைக்கிளிங், குதியேற்றம், கால்பந்து, கோல்ப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட் பால், ஆக்கி, ஜூடோ, கபடி, துடுப்பு படகு, செபக்தாக்ரா, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், தேக்வாண்டோ, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், கைப்பந்து, மல்யுத்தம், வுசூ, பளுதூக்குதல், பாய்மர படகு ஆகிய 28 விளையாட்டுகளில் மட்டும் இந்தியா கலந்து கொள்கிறது.
ஆசிய விளையாட்டின் கோலாகலமான தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்குகிறது. ‘450 கோடி மக்களின் கனவு ஒரே ஆசியா’ என்ற கருத்தை மையமாக கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. ‘ஆசியாட்’ என்ற பாடலை தென்கொரிய பாடகி ஜோ சுமி பாடுகிறார். அதன் பிறகு கொரியாவின் வரலாற்றையும், கலாசாரத்தையும் பறைசாற்றும் வித்தியாசமான கலை நிகழ்ச்சிகளும், வண்ணமயமான வாணவேடிக்கையும் நடைபெறுகிறது. தொடக்க விழாவில் ஒவ்வொரு அணிகளும் அணிவகுத்து செல்வது வழக்கம். இந்திய அணி ஆக்கி கேப்டன் சர்தார்சிங் தலைமையில் தேசிய கொடியுடன் அணிவகுத்து செல்ல இருக்கிறது.தொடக்க விழா நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் அனைத்தையும் டென் ஸ்போர்ட்ஸ், டென் ஆக்ஷன் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே