ஸ்காட்லாந்து நாட்டின் பாரம்பரியத்தை உணர்த்தும் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதேபோல பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் தொடக்க விழாவில் இடம் பெற்றன. பார்ப்பதற்கு கண்ணை கவரும் வகையிலான வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டது.கடந்த முறை போட்டியை நடத்திய நாடு என்ற முறையில் இந்திய அணி வகுப்பில் முதலாவதாக வந்தது. லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் விஜயகுமார் தேசிய கொடியை ஏந்தி வந்தார்.இந்திய வீராங்கனைகள் பச்சை கலர் சேலையுடன் அணி வகுப்பில் கலந்து கொண்டனர். வீரர்கள் தலையில் சிவப்பு தலை பாகை அணிந்து இருந்தனர். போட்டியை நடத்திய ஸ்காட்லாந்து அணியினர் கடைசியாக அணி வகுத்து வந்தனர்.உக்ரைனில் மலேசிய பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதால் மலேசிய அணியின் தங்களது கைகளில் கருப்பு பேட்ஜ் அணிந்தும், தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டப்படி அணி வகுத்து வந்தனர்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த 3 வீரர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். இங்கிலாந்து ராணி எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார்.தொடக்க விழா நிகழ்ச்சியை 40 ஆயிரம் பேர் நேரில் ரசித்தனர்.
ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 71 நாடுகள் பங்கேற்றுள்ளன. நேற்றைய தொடக்க நாளில் போட்டி எதுவும் நடைபெறவில்லை. இன்று முதல் போட்டி நடக்கிறது. 20 தங்கப்பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெறுகிறது.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 215 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. கடந்த முறை 101 பதக்கம் பெற்று 2–வது இடத்தை பிடித்தது. அதே மாதிரி இந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்திய அணி இன்று பதக்க வேட்டையுடன் கணக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பெண்களுக்கான 48 கிலோ எடை பிரிவிலும், ஆண்களுக்கான 50 கிலோ எடை பிரிவிலும் பளுதூக்கும் போட்டிகள் இந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியாவுக்கு பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.48 கிலோ பிரிவில் சஞ்சிதா சானு, மிராபாய் சானு ஆகியோரும், 56 கிலோ பிரிவில் சுகன்தே, கணேஷ் மாலி ஆகியோர் பங்கேற்கிறார்கள்.பேட்மின்டன் போட்டியில் இந்திய அணி கலப்பு அணிகள் பிரிவில் கானா மற்றும் உகாண்டாவை சந்திக்கிறது. பெண்கள் ஆக்கிப் போட்டியில் இந்திய அணி கனடாவை எதிர்கொள்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே