சிறப்பாக விளையாடி வந்த சிம்மன்ஸ் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் 44 பந்தில் 4 சிக்ஸர்களும், 5 பவுண்டரிகளும் அடித்தார். அதன் பின் களம் இறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி தனது இன்னிங்சை துவக்கியது. இந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ஸ்மித்தும் டு பிளசிஸ்சும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். மும்பை அணியின் பந்துவீச்சை ஸ்மித்தும் டு பிளெசிஸ்சும் பவுண்டரிகளை விளாசி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.
7வது ஓவரின் போது அணியின் ஸ்கோர் 60 ஆக இருந்தபோது 24 ரன்களை குவித்த ஸ்மித் அவுட்டானார். அவர் நடையை கட்டிய சில நிமிடங்களிலேயே டு பிளெசிஸ்சும் 35 ரன்னில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர் ரெய்னாவும் மெக்கல்லமும் ஜோடி சேர்ந்து வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நன்றாக விளையாடுவார் என எதிர்பார்தத மெக்கல்லம் 14 ரன்னில் அவுட்டாகி நடையை கட்டினார்.
இதன் பின் ரெய்னாவும், ஹசியும் ஜோடி சேர்ந்து விளையாடினர். ஓஜா வீசிய 16வது ஓவரில் ரெய்னா ஒரு சிக்சரும், ஹசி இரண்டு சிக்சரும் அடித்து கலக்கினர். இதனால் 30 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார் ரெய்னா. ஹசியும் தன் பங்குக்கு 29 பந்துகளில் 40 ரன்களை அடித்து அசத்தினார்.
இதனால் 19வது ஓவரிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்து சென்னை அணி மும்பை அணியை எலிமினேட்டர் சுற்றில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இனி வரும் வெள்ளியன்று சென்னை அணி பஞ்சாப் அணியுடன் மோத உள்ளது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் கொல்கத்தாவை சந்திக்கும்.
MUM – Inning
Batsman R B M 4s 6s S/R
Simmons L. c Raina S. b Jadeja R. 67 44 70 5 4 152.27
Hussey M. b Jadeja R. 39 33 40 4 1 118.18
Anderson C. c Pandey I. b Ashwin R. 20 10 10 1 2 200.00
Sharma R. c McCullum B. b Sharma M. 20 16 26 3 0 125.00
Pollard K. c Sharma M. b Nehra A. 14 8 13 1 1 175.00
Rayudu A. c Hussey D. b Sharma M. 2 3 12 0 0 66.67
Tare A. c Du Plessis F. b Nehra A. 0 1 2 0 0 0
Singh H. not out 7 2 12 0 1 350.00
Kumar P. b Sharma M. 1 2 4 0 0 50.00
Ojha P. not out 1 1 5 0 0 100.00
Extras: (lb 2) 2
Total: (20 overs) 173 (8.7 runs per over)
Bowler O M R W E/R
Nehra A. 3.6 0 34 2 9.44
Pandey I. 2.6 0 25 0 9.62
Sharma M. 3.6 0 42 3 11.67
Ashwin R. 3.6 0 26 1 7.22
Jadeja R. 3.6 0 31 2 8.61
Raina S. 0.6 0 13 0 21.67
CHE – Inning
Batsman R B M 4s 6s S/R
Raina S. not out 54 32 59 4 2 168.75
Smith D. R. c Pollard K. b Singh H. 24 20 31 4 0 120.00
Du Plessis F. b Singh H. 35 20 37 5 1 175.00
McCullum B. st Tare A. b Ojha P. 14 11 15 0 2 127.27
Hussey D. not out 40 29 42 2 3 137.93
Extras: (w 6, lb 3) 9
Total: (18.4 overs) 176 (9.4 runs per over)
Bowler O M R W E/R
Anderson C. 2.6 0 35 0 13.46
Pollard K. 0.6 0 10 0 16.67
Singh H. 3.6 0 27 2 7.50
Kumar P. 3.6 0 27 0 7.50
Ojha P. 2.6 0 34 1 13.08
Bumrah J. 3.4 0 40 0 11.76
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே