தனது வேட்பு மனுவை முன்மொழியவும் ஒரு டீக்கடைக்காரரை அழைத்தார். இது நாடு முழுவதும் உள்ள டீ கடைக்காரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பலர் டீ கடைகளுக்கு ‘நமோ’ டீ ஸ்டால் என்று பெயர் சூட்டினார்கள்.
மோடி பிரதமர் ஆக பதவி ஏற்று இருப்பதை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ஒரு டீக்கடைக்காரர் வித்தியாசமான முறையில் கொண்டாடுகிறார்.அவரது பெயர் கலியமூர்த்தி. எம்.ஜி.ஆர் நகர் பச்சையப்பன் நகரில் டீகடை நடத்தி வருகிறார். மோடி பிரதமர் ஆக பதவி ஏற்று இருப்பதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் இன்று 1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்கிறார்.
இது பற்றி கடையின் முன்பு பெரிய அறிவிப்பு பலகையும் வைத்துள்ளார். அந்த கடையில் இன்று டீ குடிக்க கூட்டம் அலை மோதியது.இது பற்றி கலியமூர்த்தி கூறியதாவது:–நான் பா.ஜனதா கட்சியில் இருக்கிறேன். எங்களை பெருமை படுத்தியவர் மோடி. அவர் பிரதமராகி இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது.எனவே இன்று முழுவதும் 1 ரூபாய்க்கு டீ விற்கிறேன். வழக்கமாக எனது கடையில் டீ விலை ரூ.7 ஆகும். தினமும் ரூ.5 ஆயிரத்துக்கு மேல் டீ விற்பனையாகும். இலவசமாக கொடுத்தால் நன்றாக இருக்காது. எனவே 1 ரூபாய்க்கு விற்கிறேன். இந்த நாளை மகிழ்ச்சியாக கருதுகிறேன்.
இவ்வாறு கலியமூர்த்தி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே