இந்நிலையில், ஐ.பி.எல். தொடரை இந்தியா, வங்காளதேசம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன என்றும் ஏப்ரல் 16-ல் தொடங்கி, ஜூன் 1-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும் என்றும் ஐ.பி.எல். நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.இத்தொடரின் முதல் பகுதி ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கின்றன. ஏப்ரல் 16-ந் தேதி முதல் ஏப்ரல் 30 வரை ஐக்கிய அரபு அமீரகத்திலும், மே 1 முதல் 12 வரை வங்காளதேசத்திலும் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மே 12-ந் தேதிக்குப் பிறகு அனைத்து போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 16-ந்தேதி எந்த போட்டிகளும் நடத்தப்பட மாட்டாது. விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்று ஐ.பி.எல். தெரிவித்துள்ளது.
முன்னதாக, போட்டிகளை மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியாவில் நடத்த பிசிசிஐ விரும்பினால் எந்த ஆட்சேபனையும் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியது. எனினும், சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் பாதுகாப்பு கவலைகளை முதலில் எடுத்துக்கொண்டு, அந்த மாநிலங்களிடம் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என்றும் உள்துறை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே