‘காம்ப்ளான்’ விளம்பர தூதரானார் நடிகர் சூர்யா!…

சென்னை:-காம்ப்ளான் ஊட்டச்சத்து பானத்தின் தென் மண்டல விளம்பர தூதராக நடிகர் சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். ‘மன உறுதிக்கு வலிமை தரும் புதிய காம்ப்ளான்’ என்ற மையக்கருத்துடன் ஒரு குழந்தைக்கு அவர் ஊக்கமளிப்பது போல் இதற்கான தொலைக்காட்சி விளம்பர படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

வளரும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து பான துறையில் காம்ப்ளான் பிராண்டு முன்னணியில் இருந்து வருகிறது. இந்நிறுவனம் வெற்றிகரமாக 50-வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளதை முன்னிட்டு இந்த ஆண்டில் பொன் விழாவைக் கொண்டாடுகிறது.இதற்காக பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் நடவடிக்கைகளில் புதுமைகளை புகுத்த உள்ளது. இதற்காக நடிகர் சூர்யா உள்பட மூன்று பிரபலங்களை ஒப்பந்தம் செய்துள்ளது. காம்ப்ளான் நிறுவனம் முதல் முறையாக தனது பான வகைகளின் விளம்பரத்திற்காக திரைப்பட நட்சத்திரங்களுடன் கரம் கோர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

காம்ப்ளானின் கூட்டு குறித்து கருத்து தெரிவித்த நடிகர் சூர்யா, “லட்சக்கணக்கான குடும்பங்களின் அபிமான பெயராக காம்ப்ளான் உள்ளது. புகழ்பெற்ற இந்த பிராண்டுடன் இணைந்திருப்பதை பொதுமக்களுடன் நான் நெருக்கமான தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதற்கான மாபெரும் வாய்ப்பாக கருதுகிறேன். மேலும் இந்தியாவின் மிக நம்பகமான பிராண்டுகளுள் ஒன்றாக திகழும் காம்ப்ளான் உடன் இணைந்தது எனக்கு பெருமையளிக்கிறது” என்று கூறினார்.காம்ப்ளான் பிராண்டின் உரிமையாளரான ஹெய்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சீமா மோடி, “கஜினி, சிங்கம் போன்ற அதிரடி ஆக்ஷன் படங்களால் ரசிகர்கள் மத்தியில் சூர்யாவிற்கு பெரும் புகழ் கிடைத்துள்ளது.
அனைத்து தரப்பினரும் பெரிதும் விரும்பும் அவரை எங்களுடைய புதிய டி.வி. விளம்பரத்தில் கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தமைக்காக பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்தார்.அருகிலிருந்த முழு நேர இயக்குனர் வி.மோகன், “தென் மாநிலங்களில் எமது பிராண்டின் நன்மதிப்பை மேலும் அதிகரிக்க சூர்யா உதவுவார்” என்று கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago