சர்மா 13 ரன்னில் ஆட்டம் இழந்தார்.அப்போது இந்தியா 9.2 ஓவரில் 33 ரன் எடுத்திருந்தது.அடுத்து 2-வது விக்கெட்டுக்கு தவானுடன், கேப்டன் வீராட் கோலி ஜோடி சேர்ந்தார். இருவரும் இலங்கை பந்து வீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன் சேர்த்தனர். தவான் அரை சதம் அடித்தார். மறுமுனையில் அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி48 ரன்னில் மெண்டீஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது இந்தியா 26.3 ஓவரில் 130 ரன்எடுத்திருந்தது.அதன்பின் வந்த வீரர்கள் சொதப்பியதால் இந்தியாவின் விக்கெட் மளமளவென சரிந்தது. ரகானே (22), ராயுடு (18), கார்த்திக் (4),பின்னி (0) ஆகியோர் விரைவில் வெளியேறினர். 94 ரன்கள் குவித்த தவான் சதத்தை தவறவிட்டார்.ரவீந்திர ஜடேஜா அவுட்டாகாமல் நிதானமாக நின்றார். அவருடன் அஸ்வின் சேர்ந்து ஓரளவு ரன் சேர்த்தார். இருந்தாலும்அஸ்வின் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார். கடைசி விக்கெட்டுக்கு வந்த சமி 2 சிக்சர் அடிக்க இந்தியா 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்இழப்பிற்கு 264 ரன் சேர்த்தது.
ரவீந்திர ஜடேஜா 22 ரன்னுடனும், சமி 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இலங்கை அணி சார்பில் மெண்டீஸ் 4 விக்கெட்டும், செனநாயகே 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.பின்னர் 265ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 4 பந்துகள் மீதமிருந்த நிலையில் த்ரில்வெற்றி பெற்றது.இந்த அணியின் சங்கக்கரா அதிரடியாக விளையாடி 84 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார்.தொடக்க ஆட்டக்காரர்குஷால் பெரோரா 64 ரன்கள் எடுத்தார்.இந்திய அணி தரப்பில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார்.நெருக்கடியான நேரத்தில் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய சங்கக்கரா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே