திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி, தற்போது, தே.மு.தி.க., என்ற கட்சியை துவக்கி நடத்தி வருபவர், விஜயகாந்த். இயக்குனர், ஆர்.கே.செல்வமணி இயக்கிய, ‘கேப்டன் பிரபாகரன்‘ என்ற திரைப்படம், நடிகர் விஜயகாந்துக்கு, அவரின் திரைஉலக வாழ்வில், பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதனால், விஜயகாந்தின் ரசிகர்கள் அவரை, கேப்டன் என்ற, அடைமொழியுடன் அழைத்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நடிகர் சங்க தலைவராக, விஜயகாந்த் பொறுப்பேற்ற போது, மரியாதை அடிப்படையில், நடிகர்களும், அவரை ‘கேப்டன்‘ என்றே, அழைக்கத் துவங்கினர்.
நாளடைவில், விஜயகாந்த் என்பதை விட, கேப்டன் என்ற அடைமொழியைச் சொன்னாலே, எல்லாரும் புரிந்து கொள்ளும் நிலைமை உருவானது. அதனால், போஸ்டர்கள், கட்சி பேனர்கள், அறிக்கைகள் என அனைத்திலும், கேப்டன் என்ற பெயரே, மேலோங்கியது. தே.மு.தி.க.,வின் இணையதளம், விஜயகாந்தின், ‘பேஸ்புக்’ போன்றவற்றிலும், கேப்டன் என்ற, அடைமொழியே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ‘ராணுவத்தில், உயர் பொறுப்பில் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டிய, கேப்டன் பதவி பெயரை, அரசியல்வாதியான, விஜயகாந்த் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என, காந்தியவாதி கண்ணன் கோவிந்தராஜ், தமிழக உள்துறை செயலருக்கு கடிதம் அனுப்பிஉள்ளார்.
இதுகுறித்து, கண்ணன் கோவிந்தராஜ் கூறியதாவது: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கேப்டன் என்ற அடைமொழியை, 15 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறார். இது, அரசியல் சட்டத்துக்கு முரணானது. 1950ல், இயற்றப்பட்ட ராணுவ சட்டத்தின் பதவி மற்றும் பெயர்களை, முறைகேடாக பயன்படுத்தப்படுத்துவதை தடை செய்யும் பிரிவின் படி, ராணுவ அதிகாரிகளே, ‘கேப்டன்’ என்ற அடைமொழியை பயன்படுத்த முடியும். சாதாரண குடிமக்கள் பயன்படுத்துவதற்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், அரசியல் கட்சித் தலைவரான விஜயகாந்த், ‘கேப்டன்’ என்ற அடைமொழியை பயன்படுத்துவது, சட்டத்துக்கு முரணானது. எனவே, விஜயகாந்த் ‘கேப்டன்’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை செய்ய வேண்டும் என, உள்துறை செயலருக்கு கடிதம், அனுப்பி உள்ளேன். அதே போல், விஜயகாந்துக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன். என் கடிதத்திற்கு, விஜயகாந்திடம்இருந்து, இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இன்னும் ஒரு மாதத்துக்குள், கேப்டன் என்ற அடைமொழியை பயன்படுத்துவதை நிறுத்தவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பேன். இவ்வாறு, அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே