அசினுக்கு எதிராக அவதூறு!…

மும்பை:-அசின் காருக்குள் இருப்பது போன்ற சர்ச்சை படமொன்று சமீபத்தில் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தற்போது போலியான படம் என்று தெரியவந்துள்ளது. வேறு படத்தை அசின் என தவறுதலாக வெளியிட்டு உள்ளனர்.

அசினின் ஊடகம் புகைப்பட பொறுப்பாளர் இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் அசின் பற்றி வெளியான செய்திகள் உண்மையானவை அல்ல. புகைப்படமும் போலியானது. இது அசின் பெயருக்கு களங்கமும், அவதூறும் ஏற்படுத்தும் செயல் ஆகும். செய்தி முற்றிலும் தவறானது. போட்டோவும் போலியானது என்று தெரிவித்து உள்ளார்.மேலும் அவர் கூறும்போது அசினை மிராண்டா குளிர்பான நிறுவனம் பத்து வருடத்துக்கு விளம்பர தூதுவராக நியமித்துள்ளது. இதில் எட்டு வருடங்கள் முடிந்துள்ளது. மேலும் இரு வருடங்கள் உள்ளன. பத்து வருடங்கள் தொடர்ந்து அசினை விளம்பர தூதவராக நியமித்து இருப்பது சாதனையாகும் என்று குறிப்பிட்டு உள்ளார்.

அசின் கூறும்போது, மிரண்டா விளம்பர படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். புது விளம்பரமாகவும் இருந்தது. ரசிகர்கள் இதனை ரசிப்பார்கள் என்றார். இதுபோல் அமெரிக்கா அழகு பொருட்கள் தயாரிக்கும் ஏவோன் நிறுவனமும், அசினை விளம்பர தூதுவராக நியமித்து உள்ளது.இதற்கான நிகழ்ச்சியில் அசின் பங்கேற்று பேசும்போது படத்தின் கதையையே முக்கியமாக பார்க்கிறேன். சிறந்த கதைகளாக இருந்தால் யாருடன் வேண்டுமெனாலும் இணைந்து நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார்.
நிறுவனத்தின் மேலாளர் பேசும்போது, ‘‘அசின் சிறந்த பெண்மணி. வெளிப்புற தோற்றத்தில் மட்டும் அவர் அழகானவர் அல்ல. மனதளவிலும் அழகானவர். எனவேதான் அவரை விளம்பர தூதவராக தேர்வு செய்தோம்’’ என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago