நாட்டின் மோசமான பொருளாதார நிலைமைக்கு தற்போதைய ஆட்சியே காரணம். கட்டமைப்புகள் வந்தபோதிலும், அவை எரிசக்தியை சார்ந்து இருக்கின்றன.
ஆனால், எரிசக்தி இல்லாமல் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. இதற்கு யாராவது பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், யாருமே பொறுப்பு ஏற்பது இல்லை என்பதுதான் மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது.திட்டமிடல் இல்லாததால், குறைவான சாதனை புரிந்தவர்களை கொண்ட நாடாக இந்தியா மாறிவிட்டது. இந்த நிலைமையில் இருந்து நாம் விடுபட வேண்டும். நாம் நன்கு திட்டமிட்டால், மிகப்பெரிய உயரத்தை அடையலாம். தொழில் வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லாத நிலை காணப்படுகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பற்றி பிரதமர் மன்மோகன்சிங் பேசுகிறார். ஆனால், கல்வி மூலம் ஏழைகளின் தகுதியை உயர்த்தாவிட்டால், இது எப்படி சாத்தியம் ஆகும்? நாம் கனிமங்களை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தால், வேலைவாய்ப்பையோ, வளர்ச்சியையோ உருவாக்க முடியாது.தற்போதைய 21-வது நூற்றாண்டு பிறப்பதற்கு முன்பு, எல்லோரிடமும் ஒரு ஆர்வம் இருந்தது. ஆனால், 21-வது நூற்றாண்டுக்கான வியூகம் இன்னும் வகுக்கப்படவில்லை.வேளாண் துறையும், சேவைத்துறையும் மிகவும் முக்கியமானவை. வேளாண் உற்பத்தியை பெருக்க கவனம் செலுத்த வேண்டும். ஆனால், மக்கள் தொகை பெருகும் அதே நேரத்தில், நிலத்தின் பரப்பு சுருங்கி வருகிறது. வளர்ச்சியில் சாதாரண மக்களையும் பங்குதாரர்களாக ஆக்க வேண்டும். நிறைய சிறுதொழில் நிறுவனங்களை தொடங்க வேண்டும்.
நமது இளைஞர்களால் செய்ய முடிந்த வேலைகளுக்கு நாம் வெளிநாட்டு ஆட்களை நியமித்து, கோடிக்கணக்கான ரூபாயை செலவழித்து வருகிறோம். இந்த நிலையை மாற்ற வேண்டும்.இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே