இதுபற்றி கடந்த சில மாதங்களாக பல்வேறு ஆலோசனைக்குப் பிறகு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க பெரும்பான்மையான தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.இதுதொடர்பாக இன்று நடைபெறும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முறைப்படி முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக இறுதி முடிவு எடுப்பதற்காக டெல்லியில் நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திலும் மக்களவைத் தேர்தல் பணிகள் மற்றும் வேட்பாளர் தேர்வு குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் ராகுல் காந்தியை பிரச்சாரக் குழு தலைவராக தேர்வு செய்து, அவர் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
பிரதமர் பதவி வேட்பாளராக ராகுல் காந்தியை அறிவிக்காதது காங்கிரஸ் தலைவர்களில் சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள அதே வேளையில், இந்த முடிவை பா.ஜ.க. கேலி செய்து விமர்சித்துள்ளது.இது தொடர்பாக டெல்லியில் பேட்டியளித்த பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் நிருபர்களிடம் கூறுகையில், ‘மோடி தான் அடுத்த பிரதமராக வரப்போகிறார் என்று காங்கிரஸ் கட்சி புரிந்து கொண்டுள்ளது என்பதையே இந்த அறிவிப்பு தெளிவாக்குகிறது’ என்றார்.
அக்கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லி கருத்து தெரிவிக்கையில், ‘காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியால் இந்த முறை நிச்சயமாக மத்தியில் ஆட்சி அமைக்கவே முடியாது என்ற யதார்த்தத்தை காங்கிரஸ் கட்சியும் உணர்ந்துள்ளது. பின்னர், எதற்காக பிரதமர் பதவிக்கான வேட்பாளரை அறிவிக்க வேண்டும்? என காங்கிரஸ் கருதுவதாகவே இந்த அறிவிப்பு விளக்குகிறது.மோடியின் செல்வாக்குடன் ஒப்பிட்டு பார்க்கும் போது ராகுல் காந்தி, மோடியின் உயரத்தை இன்னும் எட்டவில்லை என்பதையும் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது’ என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே