மதுரை இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ள நித்யானந்தா ஆதீன மடத்தில் இன்று சொற்பொழிவாற்றினார். மதுரை ஆதீன மடத்தை விட்டு ஒருபோதும் வெளியேறப்போவதில்லை என்று இளைய ஆதீனம் நித்யானந்தா திட்டவட்டமாக தெரிவி்த்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியது, மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக என்னை நியமித்துள்ளார்கள். என்னை ஆதீனமாக்கியதை எதிர்த்து சிலர் போராடி வருகிறார்கள். மதுரை ஆதீனத்தை மீட்கப் போவதாகக் கூறி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். என்னை எதிர்ப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு கொடுத்துள்ளோம். இது குறித்து முதல்வர் விரைவில் நடவடிக்கை மேற்கொள்வார். என்னைப் பற்றியும், மதுரை ஆதீன மடம் குறித்தும் தான் கூறிய கருத்துகளை வாபஸ் பெறுவதாக காஞ்சி ஜெயேந்திரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காஞ்சி மடத்தில் இருந்து தனது உதவியாளரை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார். ஜெயேந்திரர் மீது நடிகை ரஞ்சிதா வழக்கு தொடர்ந்துள்ளது அவர்களுக்கு இடையேயான பிரச்சனை. அதற்கும், எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அதனால் ஜெயேந்திரர் மீதான வழக்கை வாபஸ் பெறுவது குறித்து ரஞ்சிதா தான் முடிவு எடுக்க வேண்டும். என்னை மதுரை ஆதீனமாக்கியதற்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் சந்திப்போம். எதிர்ப்பாளர்களின் விமர்சனங்கள் கேலிக்கூத்தானது. நான் ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல. ஆன்மீகமானவன். அதனால் மதுரை ஆதீன மடத்தைவிட்டு ஒருபோதும் வெளியேற மாட்டேன். தற்போது என்னை எதிர்ப்பவர்கள் விரைவில் என்னை ஆதரிப்பார்கள் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே
View Comments
தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/
வாழ்க தமிழ், வளர்க தமிழ்....