ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க


காணொளி:-

‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதை எழுதியவர் வேறு யாரும் அல்ல விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் தான்.

ஊடகத்துறையில் கோபிநாத் என்ற பெயரை விட நீயா நானா கோபிநாத் என்ற பெயர்தான் பிரபலம். அந்த அளவிற்கு வெற்றிகரமாக அவர் நீயா நானா நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். ஒரு டாக் ஷோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் மிக லாவகமாக அந்த நிகழ்ச்சியின் மூலம் வெற்றி கொடி நாட்டியுள்ளார். தான் நிகழ்ச்சி நடத்துநர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதையும் தனது ‘ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க!’ நூலின் வாயிலாக நிரூபித்துள்ளார் கோபிநாத். அவர் தனது அனுபவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் தனது எழுத்துக்களில் வடித்துள்ளார்.

முதல் புத்தகமான ‘தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற நூலை இவர் 2007ம் ஆண்டு எழுதினார். அதைத் தொடர்ந்து எழுதிய ‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க !’ என்ற நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் பதிப்பிக்கப்பட்டது. தற்போது அந்த நூல் 16வது முறையாக பதிப்பிக்கப்பட்டு 2 லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. அந்த புத்தகம் அனைவரையும் கவர முதல் காரணம் அதன் தலைப்பே என்றும் அந்த தலைப்பு தான் அதை வாங்கத் தூண்டுவதாக இருக்கிறது என்றும் இந்தப் புத்தகத்தை வாசித்தால் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படுவதாக வாசகர்கள் கூறுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago