தமன்னா இடத்தில் “மைனா” அமலா பால்

தடுக்கி விழுந்தாலும் தமன்னா, தாண்டி குதிச்சாலும் தமன்னா என்று எல்லா நேரத்திலும் தமன மந்திரம் வாசித்துக் கொண்டிருந்த கோடம்பாக்கத்தில் ஒரு அதிரடி திருப்பம். தமன்ஸ் நடித்துக் கொண்டிருந்த ஒரு படத்திலிருந்து அவரை நீக்கியிருக்கிறார்கள்.

த்ரிஷா, நயன்தாராக்கள் ஏற்படுத்திய வெற்றிடத்தை நிரப்ப திடீரென்று உள்ளே வந்தவர்தான் தமன்னா. அதன்பின் அதிர்ஷ்டம் அவரை தாறுமாறான வேகத்தில் செலுத்திக் கொண்டிருக்க, ‘இதுக்கு ஒரு ஸ்பீட் பிரேக்கர் இல்லாமே போச்சே…’ என்று மனசுக்குள் வெந்து கொண்டிருந்தார்கள் சிலர். இதோ வெந்த புண்ணுல வெல்லத்தை தடவியிருக்கிறது விதி.

லிங்குசாமி தயாரித்து இயக்கும் வேட்டை படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னாவைதான் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். கடந்த சில வாரங்களாக ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் கொடுத்த தேதியில் ஷட்டிங் வருவதேயில்லையாம் தமன்னா. இவரது கால்ஷீட் சொதப்பலால் போட்டு வைத்த திட்டமெல்லாம் திடீர் திடீரென்று மாறுவதால், பெரும் ஆத்திரமுற்றாராம் லிங்குசாமி.

உடனடியாக கால்ஷீட் கிடைக்கும் என்றால் அமலாவை அழைக்கலாமே என்று லிங்குசாமி கருத, பெரிய இயக்குனர்கள் மூச்சு விட்டால் கூட அது மேனேஜர்களுக்கு கேட்குமே! படக்கென்று கமிட் ஆகிவிட்டாராம் அமலா. ஹம், ஒரு வெற்றிடத்தை இன்னொரு வெற்றிடம் நிரப்புகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago