செய்திகள்,முதன்மை செய்திகள் பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு !

பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு !

பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு ! post thumbnail image
சபரிமலை கோவில் நடை நாளை முதல் முறையாக திறக்கப்படுகிறது. பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது .

கேரள மாநில அரசு இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக அறிவித்தது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . கேரளா முழுவதும் போராட்டம் நடைபெற்றது. பற்பல அமைப்புகள் போராட்டக்களத்தில் குதித்தன. இதனால் போராட்டம் தீவிரம் அடைந்தது.

பா.ஜனதா கட்சி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கண்டித்து 90 கி.மீ. தொலைவுக்கு பிரமாண்ட பேரணியை நடத்தியது.ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டடோர் பேரணியில் கலந்துகொண்டதால் திருவனந்தபுரம்
ஸ்தம்பித்தது.

பா.ஜ.க மாநில செயலாளர் ஸ்ரீதரன்பிள்ளை பேசுகையில் ” தங்களது முதல்கட்ட போராட்டம் பெரிய வெற்றியை பெற்றுள்ளதாகவும், 24 மணி நேரத்திற்குள் மாநில அரசு சரியான முடிவை எடுக்காவிட்டால் அடுத்தகட்டமாக இதை விட பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.

அரசின் தலையீட்டில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில் இன்று பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த கூட்டத்தில், “சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மாநில அரசும், தேவசம் போர்டும் உடனடியாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். அது தொடர்பான தீர்ப்பு வரும்வரை சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும்.

தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையையே பின்பற்ற வேண்டும் ” என்று இந்த கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வற்புறுத்தினார்கள்.

தேவசம்போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில் “சபரிமலை கோவிலின் பாரம்பரியம், நம்பிக்கைகளை பாதுகாக்கவே விரும்புவதாகவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண முடியும் ” என்றார்.

இந்நிலயில் சபரிமலை கோவில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக நாளை (17-ந்தேதி) மாலை திறக்கப்படுகிறது. 22-ந்தேதி வரை 5 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும். நாளை முதலே சபரிமலை கோவிலுக்கு பெண் பக்தர்கள் வருகை தர வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே சபரிமலைக்கு பெண் பக்தர்கள் சென்றால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று இந்து அமைப்புகள் எச்சரித்து உள்ளன. சிவசேனா இது தொடர்பாக தற்கொலை மிரட்டலும் விடுத்துள்ளது.

சபரிமலை பகுதியில் சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளதால் சபரிமலை பாதுகாப்பு பணி நடைமுறையில் எந்த மாற்றமும் செய்யப்போவது இல்லை. பெண் போலீசாரை அங்கு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்போவதில்லை என்று தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி