திரையுலகம் கவர்ச்சி உடை பற்றி விமர்சனம் : நடுவிரலை காட்டிய சமந்தா !

கவர்ச்சி உடை பற்றி விமர்சனம் : நடுவிரலை காட்டிய சமந்தா !

கவர்ச்சி உடை பற்றி விமர்சனம் : நடுவிரலை காட்டிய சமந்தா ! post thumbnail image
கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படம் வெளியிட்டார் நடிகை சமந்தா .அதனை கிண்டல் செய்தவர்களுக்கு நடுவிரலை பதிலாக தந்துள்ளார் .தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையான சமந்தா ,தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துள்ளார் .சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பவர் சமந்தா .அவ்வப்போது தனது செல்பி ,கவர்ச்சி படங்களை வெளியிடுவது வழக்கம்.அப்போதெல்லாம் திருமணமானவர் இப்படி புகைப்படம் போடலாமா என் பலர் கமெண்ட் செய்வார்கள்.அவர்களை மதிப்பதில்லை என சமந்தா கூறுவார்.

தற்போது சமீபமாக கவர்ச்சி படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் சமந்தா .உடனே விமர்சனமும் வந்தது .அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில்,நடுவிரலை காட்டும் புகைப்படத்தை போஸ்ட் செய்தார் .இதற்கு ட்ரோல்களும்,ஆதரவும் அவருக்கு வந்து குவிந்துள்ளன .

சமீபமாக சமந்தா நடித்து ஓடிவரும் சீமராஜா ,யூ டர்ன் ஆகிய திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடி வருவது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி