Atharvaa

செய்திகள், திரையுலகம்

நடிகர் அதர்வா எடுத்த அதிரடி முடிவு!…

சென்னை:-பாணா காத்தாடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இவர் நடிப்பில் பரதேசி படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதை தொடர்ந்து இவர் ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வர இரும்பு குதிரை படத்தில் நடித்தார். இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை. இதனால், இனி இது போன்ற கதைகள் வேண்டாம், நகைச்சுவை, காதல் ஆகிய கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவெடுத்துள்ளாராம்.

செய்திகள், திரையுலகம்

நடிகர் விஜய் பாணியில் அதர்வா?…

சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘கத்தி’. இப்படத்தில் விவசாயிகள் மற்றும் தண்ணீர் பிரச்சனைகள் பற்றி ஆழமாக கூறப்பட்டது. தற்போது அதர்வா, சற்குணம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, இயக்குனர் பாலா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படமும் கத்தி பாணியில் விவசாயம், தண்ணீர் பிரச்சனைகளை அலசி ஆராயும் கதை தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

செய்திகள், திரையுலகம்

தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா மீது புகார்!…

சென்னை:-வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா படங்களில் கதாநாயகியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படங்களுக்கு பின் பட வாய்ப்புகள் குவிந்தன. சம்பளமும் கூடியது. தற்போது சிவகார்த்திகேயனுடன் காக்கிசட்டை, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை படங்களில் நடிக்கிறார். அதர்வாவுடன் ஈட்டி படத்திலும் நடிக்கிறார். இப்படங்களுக்கு முன்பு நகர்ப்புறம், காட்டு மல்லி என இரு படங்களில் நடிக்க ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அப்படங்கள் நின்று போயின. அவ்விரு படங்களின் படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்த அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஸ்ரீதிவ்யா கால்சீட் கொடுக்க மறுக்கிறாராம். இதனால் இரண்டு தயாரிப்பாளர்களும் ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கிறார்கள்.

செய்திகள், திரையுலகம்

இரும்பு குதிரை (2014) திரை விமர்சனம்…

அதர்வா படித்து முடித்துவிட்டு பீட்சா கடையில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார். இவர் பைக் ஓட்டுவதென்றால் ரூல்ஸை கடைப்பிடிக்கிற கேரக்டர். ஒருநாள் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். பார்த்தவுடனேயே அவள் அழகில் மயங்கிவிடுகிறார்.மறுநாளும் பஸ்ஸில் போகும்போது பிரியா ஆனந்தை பார்க்கிறார். அப்பொழுது பிரியா ஆனந்த் நேரடியாக இவரிடம் வந்து, அவரை காதலிப்பதாக கூறிவிட்டு சென்றுவிடுகிறார். அதைக்கேட்டதும் அதர்வா அதிர்ச்சியில் உறைந்து போகிறார். மறுபக்கம் சந்தோஷமும் அடைகிறார். ஒருநாள் பிரியா ஆனந்தின் வீட்டுக்கே பீட்சா டெலிவரி பண்ணப்போகும் அதர்வாவிடம், பிரியா ஆனந்த் தான் அன்று பஸ்ஸில் தனது பிரெண்டோட பாய் பிரெண்டை கலாய்ப்பதற்கு பதில், தவறுதலாக உன்னிடம் கூறிவிட்டேன் என்று சொல்கிறாள். இதனால் சோகத்துடன் திரும்பும் அதர்வா, அவளுடைய போன் நம்பரை கண்டுபிடித்து அவளுடன் பேசத்துடிக்கிறார்.ஒருகட்டத்தில் பிரியா ஆனந்தின் போன் நம்பரை கண்டுபிடித்து அவளிடம் பேச ஆரம்பிக்கிறார் அதர்வா. அவளும் அதர்வாவுடன் பேசத்தொடங்குகிறாள். இருவரும் நட்பாக பழகிக்கொண்டிருக்கும்போது அதர்வா மனதுக்குள் மட்டும் காதல் துளிர்விடுகிறது. பிரியா ஆனந்த்துக்கு பைக் என்றால் கொள்ளை பிரியம். ஒரு பைக்கின் சத்தத்தை வைத்தே அது எந்த பைக் என்று கண்டுபிடிக்கக்கூடிய ஆற்றல் படைத்தவள். அவள் நமக்கென்று ஒரு பைக் இருந்தால் எப்படி இருக்கும் என்று அதர்வாவிடம் தனது ஆசையை கூறுகிறாள். பிரியா ஆனந்திற்கு விருப்பமான பைக்கை வாங்க முடிவெடுத்து ஒரு ஷோரூமுக்கு செல்கிறார்கள். அங்கு சில பைக்குகளை பார்த்து திருப்தியடையாத பிரியா ஆனந்த், குடோனுக்குள் வைக்கப்பட்டிருக்கும் ரேஸ் பைக்கான டிகார்டி பைக்கை வாங்கவேண்டும் என்று அதர்வாவிடம் கூறுகிறாள். அதர்வாவோ அந்த பைக் வேண்டாம் என்று கூறுகிறார். ஆனால், பிடிவாதமாக பிரியா ஆனந்த் அந்த பைக்தான் வாங்கவேண்டும் என்று கூறிவிட்டு சென்றுவிடுகிறார்.வேறு வழியின்றி அதர்வாவும் அந்த பைக்கை வாங்கிக்கொண்டு பிரியா ஆனந்தை சந்திக்கிறார். அதனால் சந்தோஷமடையும் பிரியா ஆனந்த், அதர்வாவை கூட்டிக்கொண்டு தான் படித்த கல்லூரிக்கு சென்று சுற்றி காட்டுகிறாள். அப்போது அவள்மீதுள்ள காதலை சொல்லும் அதர்வாவிடம், நட்பாகத்தான் பழகுகிறேன் என்று சொல்லி அவன்மீது கோபப்படுகிறாள். இருவரும் அங்கிருந்து கோபத்துடனேயே திரும்பி வரும்வேளையில் இவர்களை ஜானி மற்றும் அவருடைய ஆட்கள் ரேஸ் பைக்கில் வந்து அவர்களை சுற்றி வளைத்து ஒரு குடோனுக்குள் அழைத்துச் செல்கின்றனர். அங்கு அதர்வாவை அடித்துப் போட்டுவிட்டு, பிரியா ஆனந்தை கடத்தி சென்றுவிடுகின்றனர்.ஜானி, பிரியா ஆனந்தை கடத்திச் செல்ல காரணம் என்ன? பிரியா ஆனந்தை ஜானியிடம் இருந்து அதர்வா மீட்டாரா? என்பதை சுவாரஸ்யத்துடன் பிற்பாதியில் சொல்லியிருக்கிறார்கள். ‘பரதேசி’ படத்திற்கு பிறகு அதர்வாவுக்கு இப்படத்தில் நடிக்க நல்ல வாய்ப்பு. அதை சரியாகவும், செம்மையாகவும் செய்திருக்கிறார். பைக் ஓட்டுவதில் ரூல்ஸ் ராமானுஜராக வரும் அதர்வா, பிற்பாதியில் எடுக்கும் விஸ்வரூபம் அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது. இந்த படத்தில் எதற்காக சிக்ஸ் பேக் வைத்தார் என்பதுதான் தெரியவில்லை.பிரியா ஆனந்த்-அதர்வாவுடன் இணைந்து வரும் காட்சிகளில் அழகாக நடித்திருக்கிறார். அதர்வாவின் நண்பியாக வரும் லட்சுமிராய் நடிப்பிலும், கவர்ச்சியிலும் சமமாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வில்லனாக வரும் ஏழாம் அறிவு ஜானி, அதர்வாவுடன் சண்டை போடும் காட்சியில் ஆக்ரோஷம் காட்டுகிறார்.படத்தின் கதை ஓ.கேதான் என்றாலும் அதை திரைக்கதையாக்குவதில்தான் இயக்குனர் யுவராஜ் போஸ் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். படத்தின் முன்பாதியை நகர்த்துவதற்கு ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார். பிற்பாதியில், கொஞ்சம் விறுவிறுப்பு காட்டியிருக்கிறார். இருந்தாலும் ஒருசில காட்சிகளை நீளமாக வைத்திருப்பதால் கொஞ்சம் போரடிக்க வைத்திருக்கிறது.படத்தில் பாராட்டப்பட வேண்டியது கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவுதான். இறுதிக்காட்சியையும், படத்தின் பாடல்களையும் படமாக்கியது அருமை. ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசை பரவாயில்லை. மொத்தத்தில் ‘இரும்பு குதிரை’ சாகசம்………….

செய்திகள், திரையுலகம்

பிரியா ஆனந்தைத் தொடர்ந்து சரக்கு அடித்த நடிகை லட்சுமி ராய்!…

சென்னை:-விக்ரம்பிரபு நடித்த அரிமா நம்பி படத்தில் ஒரு காட்சியில் சரக்கு அடிப்பது போல் நடித்திருந்தார் நடிகை பிரியாஆனந்த். அதையடுத்து ஒரு தமிழ் நடிகை இப்படி நடிப்பதா? என்று அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தன மீடியாக்கள். அதற்கு, ஆண், பெண் இருவரும் சரிசமம் என்பதை சொல்லத்தான் அப்படியொரு காட்சி வைத்தேன் என்று அப்பட டைரக்டர் விளக்கம் கொடுத்தார். இந்நிலையில், அதர்வா நடித்துள்ள இரும்புக்குதிரை படத்தில் அதே ப்ரியா ஆனந்தே நாயகியாக நடிக்க, இன்னொரு நாயகியாக நடித்துள்ள ராய்லட்சுமி, ஒரு பாடல் காட்சியில் ஷோலோ ஆட்டம் போடுபவர், பாடல் முடிகிறபோது, சரக்கு அடித்துக்கொண்டு நிற்கும் அதர்வாவிடம் வந்து, ஒரு கிளாசை கையில் எடுப்பார்.அப்போது, தனக்குத்தான் அவர் தரப்போகிறார் என்று பார்ப்பார் அதர்வா. ஆனால், ராய்ல ட்சுமியோ, அந்த கிளாசை தனது வாயில் வைத்து ஏக் தம்மில் காலி பண்ணி விட்டு கீழே வைப்பார். அதை ஆச்சர்யத்துடன் பார்த்தபடி நிற்கும் அதர்வா, தலையில் அடித்துக்கொண்டு ராய்லட்சுமி பின்னாடியே நடப்பார். இந்த காட்சியில் ராய்லட்சுமி நடித்திருப்பது, படம் திரைக்கு வரும்போது சர்ச்சையை உருவாக்கும் என்று சிலர் கூறி வருகிறார்கள். அதற்கு ராய்லட்சுமியோ, நான் சரக்கு அடித்ததை சர்ச்சையாக்கினால், அதர்வா சரக்கு அடித்ததற்கும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று சொன்னவர், அப்படியொரு நிலை வரும்போது நானும் இதை உரிமை பிரச்சினையாக்குவேன் என்று சர்ச்சையை எதிர்கொள்ள இப்போதே தயாராகி விட்டாராம்.

செய்திகள், திரையுலகம்

நடிகர் அதர்வாவை பார்வையிலேயே மிரட்டிய ஏழாம் அறிவு வில்லன்!…

சென்னை:-நடிகர் அதர்வா நடிப்பில் பைக் ரேஸை மையமாகக்கொண்டு இரும்புக்குதிரை என்ற படம் தயாராகியுள்ளது.பாண்டிச்சேரியை களமாகக்கொண்ட இந்த படத்தில் ஒரே நேரத்தில் 30க்கும் மேற்பட்ட பைக் ரேஸ்கள் போட்டியில் கலந்து கொள்வது போன்ற அதிரடியான காட்சிகளை படமாக்கியிருக்கிறார்களாம். அதோடு, ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்த ஜானியே இப்படத்தில் அதர்வாவுடனும் மோதுகிறார். ஏழாம் அறிவு படத்தில் சூர்யாவை எப்படி தனது பார்வையாலே மிரட்டினாரோ அதேபோன்று இந்த படத்திலும் இன்னொரு கோணத்தில் அதர்வாவை மிரட்டியிருக்கிறாராம் அவர். முக்கியமாக அவரது உருட்டல் மிரட்டல்கள் வார்த்தைகளாக இல்லாமல் பார்வையிலேயே படமாக்கப்பட்டுள்ளதாம். அதனால் அவருக்கு படத்தில் டயலாக் போர்ஷன் மிகக்குறைவாம். அதன்காரணமாக, ஜானி நடித்துள்ள பெரும்பாலான காட்சிகளில் அவரது நடை உடை, மிரட்டலான பார்வைக்கு ஜி.வி.பிரகாசும் தனது பின்னணி இசையால் மிரட்டியிருக்கிறாராம். முக்கியமாக, அவர் என்ட்ரியாகும் பைட் சீன், பைக் சேஸிங் சீன்களுக்கென்றே டப் ஸ்டப், ஹிப் பாப் பாணியில் இசையமைத்துள்ளாராம். அது ஜானியின் வில்லன் நடிப்புக்கு மேலும் வில்லத்தனம் சேர்த்துள்ளதாம்.

செய்திகள், திரையுலகம்

ஜெயம்ரவி, அதர்வாவுக்காக காத்திருக்கும் தங்கர் பச்சான்!…

சென்னை:-அம்மாவின் கைபேசி படத்திற்கு பிறகு தங்கர் பச்சான் சினிமா ஏரியா பக்கம் அதிகம் காணப்படவில்லை. மிகவும் எதிர்பார்த்த அம்மாவின் கைபேசி தோற்றதில் ரொம்பவே அப்செட். ஆனால் இப்போதும் மீண்டும் சுறுசுறுப்பாகி விட்டார். காரணம் நீண்ட நாள் காத்திருக்கும் அவரது களவாடிய பொழுதுகள் விரைவில் ரிலீசாக இருக்கிறது. தற்போது விஜய் நடிக்கும் கத்தி படத்தை தயாரித்து வரும் ஐங்கரன் நிறுவனம்தான் களவாடிய பொழுதுகள் படத்தையும் தயாரித்துள்ளது. கத்தி திரைப்படத்தை வாங்கும் விநியோகஸ்தர்களிடமே களவாடிய பொழுதுகள் படத்தையும் கொடுக்க இருக்கிறது. எனவே கத்தி வெளிவருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு களவாடிய பொழுதுகள் வெளிவரும் என்பதால் தங்கர் பச்சான் உற்சாகமாக இருக்கிறார். பல ஆண்டுகளாக பிற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்வதை நிறுத்தி வைத்திருந்த தங்கர் பச்சான் மீண்டும் கமர்ஷியல் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். அதோடு தன் அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்டையும் எழுதி முடித்து விட்டார் இரண்டு ஹீரோக்கள் நடிக்கும் பவர்புல் ஸ்கிரிப்டாம். ஜெயம்ரவி, அதர்வாவிடம் கதை சொல்லியிருக்கிறார். இப்போது அவர்கள் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறார்.

செய்திகள், திரையுலகம்

நடிகை ஸ்ரீதிவ்யாவை ஆச்சர்யப்படுத்திய அதர்வா!…

சென்னை:-பாணா காத்தாடியில் அறிமுகமானவர் அதர்வா. மறைந்த நடிகர் முரளியின் மகனான இவர் அதையடுத்து, முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி ஆகிய படங்களில் நடித்தார். முதல் இரண்டு படங்களிலும் தனது வயதுக்கு ஏற்ற வேடத்தில் நடித்த அவர், அதன்பிறகு நடித்த பரதேசியில் தனது அனுபவத்தை மீறிய வேடத்தில் நடித்தார். அதனால் இப்போது ஈட்டி, இரும்புக்குதிரை, கணிதன் என முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்கள் அவருக்கு கிடைத்திருக்கிறது.இதில் ஈட்டி படத்தில் தடகள வீரராக நடிக்கும் அதர்வா, இரும்புக்குதிரையில் ரேஸ் வீரராக நடிக்கிறார். இதில் ஈட்டி படத்தில் கிட்டத்தட்ட கடைசி கட்டத்தில் நடித்துக்கொண்டிருக்கும் அதர்வா, க்ளைமாக்ஸ் சண்டை காட்சிக்காக சிக்ஸ்பேக்கிற்கு மாறியுள்ளார். இதற்காக அவர் உடல்கட்டை மாற்றியமைக்க இரண்டு மாதம் மட்டுமே டயம் கேட்டாராம் அதர்வா. அப்போது அவருடன் அப்படத்தில் டூயட் பாடும் ஸ்ரீதிவ்யா, இரண்டு மாதத்தில் எப்படி சிக்ஸ்பேக் உடல்கட்டுக்கு மாற முடியும் என்றாராம். அதற்கு, என்னால் முடியும், பொறுத்திருந்து பார் என்று கூறிவிட்டு வந்த அதர்வா, சரியாக 60 நாட்களில் சிக்ஸ்பேக் அதர்வாவாக படப்பிடிப்பு தளத்தில் போய் நின்று ஸ்ரீதிவ்யாவுககு பெரிய ஆச்சர்யத்தைக் கொடுத்தாராம்.

செய்திகள், திரையுலகம்

சிக்ஸ் பேக் கிளப்பில் இணைந்தார் நடிகர் அதர்வா!…

சென்னை:-இந்தி நடிகர்களை பார்த்து தமிழ் நடிகர்களுக்கும் சிக்ஸ்பேக் வைத்துக் கொள்ளும் மோகம் வந்தது. முதன் முறையாக சூர்யா வைத்தார். அதன் பிறகு விஷால், சிம்பு, தனுஷ் என்று வரிசையாக வைக்க ஆரம்பித்தார்கள். தற்போது அதர்வாவும் சிக்ஸ் பேக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார். அவர் தற்போது நடித்து வரும் ஈட்டி படத்தில் தடகள வீரராக நடிக்கிறார். நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டம் ஆகியவற்றில் சிறந்த இளைஞராக நடிக்கிறார். இதற்காக அவர் ஒரு வருடமாக டயட்டில் இருந்து கடுமையாக உடற்பயிற்சிகள் செய்து சிக்ஸ் பேக் கொண்டு வந்திருக்கிறார். அந்த படங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார்.இதுபற்றி அதர்வா கூறியிருப்பதாவது: தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வரும் ஒருவன், இங்கு எதிர்பாராத பிரச்சினை ஒன்றை சந்திக்கிறான். அதிலிருந்து அவன் எப்படி மீண்டு வருகிறான் என்கிற கதை. இதனால் ஒரு ஸ்போர்ட்ஸ்மேனுக்குரிய பாடிலாங்குவேஜை கொண்டு வரத்தான் இந்த முயற்சி.கடந்த ஒரு வருடமாக கடுமையான பயிற்சியும், உணவு கட்டுப்பாடும் கடைபிடித்து கொண்டு வந்திருக்கிறேன். சிக்ஸ் பேக் கொண்டு வர ஒரு ஆண்டு வேண்டும். அதை கலைக்க ஒரு நாள் போதும். தொடர்ந்து சிக்ஸ் பேக்கை தொடர இருக்கிறேன். இது தவிர படத்துக்காக எல்லா தடகள விளையாட்டு போட்டியிலும் பயிற்சி பெற்றிருக்கிறேன் என்கிறார் அதர்வா.

செய்திகள், திரையுலகம்

கோலிவுட் ஹீரோயின்களுக்கு ஷாக் கொடுத்த மெட்ராஸ் பட ஹீரோயின்!…

சென்னை:-கேரள நடிகை கேத்ரின் தெரசா என்பவர் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படம் மூலம் கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார்.இந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அவரது நடிப்பாற்றல் பற்றி பலரும் உயர்வாக பேசியதைத் தொடர்ந்து அதர்வா நடிக்கும் கணிதன் என்ற படத்தில் கமிட்டான கேத்ரின் தெரசா, இப்போது சுராஜ் இயக்கத்தில் ஜெயம்ரவி–அஞ்சலி நடிக்கும் படத்திலும் இன்னொரு நாயகியாக கமிட்டாகியுள்ளார். தமிழில் நடித்த முதல் படம் இன்னும் திரைக்கு வரும் முன்பே அடுத்தடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி விட்டார் கேத்ரின் தெரசா.அதனால் இதுவரை கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று நடித்து வந்த கேத்ரின் தெரசாவுக்கு இப்போது தமிழ் சினிமா மீது கூடுதல் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதனால் தெலுங்கில் நடித்து வரும் ராணி ருத்ரம்மா தேவி படத்தை முடித்ததும் கோடம்பாக்கத்தில குடியேறி பட வேட்டையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, இப்படி வந்த வேகத்திலேயே கார்த்திக், அதர்வா, ஜெயம்ரவி என்று முன்னணி ஹீரோக்களின் படங்களாக கேத்ரின் கைப்பற்றி விட்டதால், நயன்தாரா, அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகளும், வளர்ந்து கொண்டிருக்கும் லட்சுமிமேனன், ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட நடிகைகளும் இந்த நடிகையினால் தங்களுக்கு பாதிப்பு வருமோ என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Scroll to Top