சின்ன திரை

காமம், சின்ன திரை, செய்திகள், முதன்மை செய்திகள்

உங்களுக்கு எல்லாம் கல்யாணத்தின் மேல வெறுப்பே வராத .. வனிதா …

90-களில் அறிமுகமானாராம் அந்த மூன்றெழுத்து நடிகை. ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த அவர், பெரிய வரவேற்பு கிடைக்காததால், சினிமாவை விட்டு விலகினாராம். சினிமாவில் இருந்து விலகிய பின்னர் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அவரை விவாகரத்து செய்துவிட்டாராம். பின்னர் வேறு ஒருவரை காதலித்து திருமணம் செய்து, அவரையும் விவாகரத்து செய்துவிட்டாராம். அதன்பின்னரும் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் வாழ்வதாக கிசுகிசுக்கப்படும் அந்த நடிகை, அவரையும் விட்டு பிரிந்துவிட்டாராம். சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பெரிய முதலாளி  நிகழ்ச்சியில் தனது அதட்டலான தொனியால் தற்போது பிரபலமாகிவிட்டாராம். அதன்பின்னர் நாயகிக்கு வாய்ப்புகள் குவிகிறதாம். இந்த நிலையில், நடிகை தற்போது அடுத்த திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்களாம். இவ்வளவு அனா பிறகும் உங்களுக்கு கல்யாணம் வெறுக்கவே இல்லையா என்று நெட்டிசன்கல் பொரும்மி தள்ளுகிறார்கள் .

சின்ன திரை, திரையுலகம்

பிக் பாஸ் 2 பட்டம் வென்ற ரித்விகா !!

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றுவந்த பிக் பாஸ் 2 சீஸனின் வெற்றியாளராக நடிகை ரித்விகா அறிவிக்கப்பட்டுள்ளார் .கடந்த 100 நாட்களுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 2 நடைபெற்று வந்தது.நேற்று ஜனனி வெளியேற்றப்பட்டார். விஜயலட்சுமி, ரித்விகா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் வீட்டில் இருந்தனர். மூவரில் ஒருவரை வெளியே அழைக்க ஆரவ் உள்ளே வந்தார். அவர் ரித்விகாவை அழைத்துச் செல்வதுபோல் பாவனை செய்துவிட்டு விஜயலட்சுமியை அழைத்துச் சென்றார். வெளியே வந்த விஜயலட்சுமி,உள்ளே பல விஷயங்களை கற்றுக்கொண்டதாக கூறினார். பிறகு போட்டியிட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.ஓவியாவும் நிகழ்ச்சிக்கு வந்தார்.அவருடன் அனைவரும் உரையாடினர்.ரித்விகாவையும்,ஐஸ்வர்யாவும் பிக் பாஸ் உடன் உரையாடினர்.பின்னர் கமலஹாசன் வீட்டிற்குள் சென்றார்.உள்ளே சென்று உரையாடிய அவர்,ஆடியன்ஸுக்கு யார் வின்னர் என்று அறிவிக்காமல் டென்ஷன் ஏத்தினார். இறுதியில் மேடைக்கு வந்த அவர், ரித்விகாவின் கையை உயர்த்தி அவர் தான் வெற்றியாளர் என்று அறிவித்தார்.ரித்விகாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. துள்ளிக்குதித்தார். வாழ்க்கையில் முதல்முறையாக வெற்றியடைந்திருப்பதாகக் கூறிய அவர், வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

சின்ன திரை, திரையுலகம்

பிக் பாஸ் 2 : வெல்லப்போவது யார் ???

பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது .அது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி வாரத்தினை எட்டியுள்ளது .அதில் ரித்விகா,ஜனனி,விஜயலக்ஷ்மி,ஐஸ்வர்யா என நான்கு போட்டியாளர்கள் இறுதி சுற்றினை விளையாடி வந்தனர். அவர்களுக்கு கடந்த ஒரு வாரமாக மக்கள் வாக்களித்து வந்தனர்.அதன்படி ,ரித்விகா அதிக வாக்குகள் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை இரவு நடைபெறும் நிகழ்ச்சியில் வெற்றியாளரை அறிவிக்கயிருக்கிறார்கள்.நேற்று இரவுடன் ஓட்டளிக்கும் வாய்ப்பு முடிந்துவிட்டது.இரண்டாம் இடத்தில ஐஸ்வர்யா இருப்பதாக தெரிகிறது,ஆனால் அவர் வெற்றி பெற கூடாது என்று  ஒரு சாரார் எதிர்க்கின்றனர். இந்த நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.பரபரப்புக்கும்,சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல், சின்ன திரை, பரபரப்பு செய்திகள்

பெரிதாகிறது குட்கா ஊழல் ! கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாகிய குட்கா ஊழலில் , உணவு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை அருகே உள்ள செங்குன்றத்தில் ஒரு குட்கா குடோனில் நடைபெற்ற சோதனையில் நிறைய ஆவணங்கள் சிக்கின.அதன் மூலம் அமைச்சர் விஜய பாஸ்கர்,டிஜிபி ராஜேந்திரன் ,முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் சில அரசு அதிகாரிகளின் பெயரும் அடிபட்டன.250 கோடி வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டன .லஞ்ச ஒழிப்பு துறை விசாரித்து வந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது .குட்கா ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சர் விஜய பாஸ்கர், டி.ஜி.பி. ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ், உதவி கமி‌ஷனராக பணிபுரிந்த மன்னர்மன்னன், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சம்பத் ஆகியோரது வீடு உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடத்தியது சிபிஐ. தொடர்ந்த விசாரணையில் பங்குதாரர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டனர் .குட்கா குடோனில் நடைபெற்ற பொது கைப்பற்றப்பட்ட குட்கா சோதனைக்கு அனுப்பப்பட்டது .அதனை சோதித்த உணவு பாதுகாப்பு அதிகாரியான சிவகுமார் ,அவை போதை பொருளே இல்லை என அறிக்கை அளித்திருந்தார்.இதனால் யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் போயிற்று. இதனையே முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்ம் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில், பொய்யான அறிக்கை தாக்கல் செய்தது தொடர்ப்பாக உணவு பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிஐ வட்டாரம் தெரிவிக்கறது.சிபிஐ நீதிமன்றம் அவருக்கு 4ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

சின்ன திரை, திரையுலகம், தொழில்நுட்பம்

நடிகர் விஜய்யை சந்தோஷப்படுத்திய தேவி ஸ்ரீ பிரசாத்!…

சென்னை:-சச்சின், வீரம், மன்மதன் அம்பு போன்ற படங்களில் தன் இசையால் அனைவரையும் கவர்ந்து இழுத்தவர் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் தற்போது நடிகர் விஜய் நடித்து வரும் புலி படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்திற்கான 3 பாடல்களை ஏற்கனவே கொடுத்து, அதில் ஒரு பாடலை படக்குழு ஷுட் செய்து விட்டதாம். இந்நிலையில் இவர் கொடுத்த ஒரு பாடல் படக்குழுவை வெகுவாக கவர்ந்ததாம். அதிலும் குறிப்பாக இளைய தளபதிக்கு அந்த பாடல் மிகவும் பிடித்து விட்டதாம், இதனால், தேவி ஸ்ரீ பிரசாத்தை கட்டி பிடித்து பாராட்டினாராம்.

சின்ன திரை

தாயின் கள்ளக்காதலை செல்போனில் படம் பிடித்து தந்தைக்கு காட்டி கொடுத்த மகன்!…

ஜிம்பாவே:-ஜிம்பாவே நாடு புலாவியோ நகரை சேர்ந்தவர் துமிசானி ண்டிபெலி என்பவரது மனைவி ண்டிபெலி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சில நாட்களாக தனது தந்தையும் தாயும் சண்டை போட்டு வந்ததை கவனித்து வந்த சிறுவனுக்கு தனது தாயார் இன்னொரு ஆணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதை கண்டுபிடித்தான். பின்னர் தனது செல்போனில் தாயின் கள்ளத்தொடர்பை படம் பிடித்து தந்தையிடம் காண்பித்துள்ளான்.மகன் காண்பித்த புகைப்படங்களை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த தனது துமிசானி ண்டிபெலி மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால் வேறு வழியின்றி ண்டிபெலி தனது கணவரை விவாகரத்து செய்வதற்காக விண்ணப்பித்துள்ளார். நீதிமன்றமும் இவர்களது விவாகரத்தை உறுதி செய்துள்ளது.

சின்ன திரை, திரையுலகம்

டுவிட்டரில் இணைந்தார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்!…

சென்னை:-தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி நடிகர்கள் பலரும் ட்விட்டர் தளத்தில் இணைந்து வருகிறார்கள். ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே ட்விட்டர் தளத்தில் இணையாமல் இருந்தார்கள். ‘கோச்சடையான்‘ திரைப்படம் வெளிவர இருக்கும் நிலையில் இன்று ரஜினிகாந்த் தன்னை ட்விட்டர் தளத்தில் இணைத்து கொண்டார். அவரது ட்விட்டர் முகவரி @superstarrajini. இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,திரையுலகில் என்னுடைய வளர்ச்சி அதிசயமானது. அதற்கு என் ரசிகர்களே காரணம். சமூக வலைதளங்களின் வழியே என் ரசிகர்களோடு தொடர்பு கொண்டு, அவர்கள் சொல்வதை அறியவும், என்னுடைய கருத்துகளை அவர்களோடு பகிர்ந்து கொள்ளவும் விரும்பினேன்.என கூறியுள்ளார். ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில், ரசிகர்கள் பெருமளவில் பின் தொடர்ந்து வருகிறார்கள். அறிக்கை வெளியிட்டத்தில் இருந்து நிமிடத்திற்கு 100க்கும் மேற்பட்டோர் பின்தொடருவது குறிப்பிடத்தக்கது.

சின்ன திரை, செய்திகள்

‘நாதஸ்வரம்’ மெகாத்தொடர் இயக்குனர் திருமுருகனுக்கு கின்னஸ் சாதனை விருது!…

சென்னை:-சன் டி.வி.யில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு ‘நாதஸ்வரம்’ தொடர் ஒளிபரப்பப்படுகிறது. இந்த தொடரின் ஆயிரமாவது பகுதியையொட்டி, கடந்த 5ம் தேதி ‘நாதஸ்வரம்’ தொடர், காரைக்குடி அருகில் உள்ள பள்ளத்தூர் கிராமத்தில் இருந்து இடைவேளை இன்றி, தொடர்ச்சியாக 23 நிமிடங்கள் 25 வினாடிகள் சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.இந்தக் காட்சியை சரத் கே சந்தர் ஒளிப்பதிவு செய்தார். ‘நாதஸ்வரம்’ தொடர் சன் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பப்பட்ட போதே படப் பிடிப்பு தளத்தில் இருந்து பின்னணி இசையை சஞ்சீவ் ரத்தன் நேரடியாக அமைத்திருந்தார். பிரபல நடிகர்கள் மௌலி, பூ விலங்கு மோகன், நடிகை ஸ்ரித்திகா தவிர மற்ற 90 சதவீதம் பேர் புதுமுகங் களே நடித்திருந்தனர்.நேயர்களின் பாராட்டைப் பெற்ற இந்த சீரியலுக்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. கின்னஸ் நிறுவன பிரதிநிதி லூசியா சிங்க யேசி இதற்கான சான்றிதழை வழங்கினார்.சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறன் சார்பாக, சன் குழுமத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பு பிரிவு தலைவர் தூரன் கந்தசாமியும், நாதஸ்வரம் இயக்குநர், தயாரிப்பாளர் திருமுருகனும் கின்னஸ் சான்றிதழை லூசியா சிங்க யேசியிடம் இருந்து பெற்றுக் கொண்டனர். புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்ட புதிய முயற்சிக்கு, கின்னஸ் விருது கிடைத்திருப்பது நெகிழ்ச்சி தருவதாகவும், இந்த கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு ஊக்கம் அளித்து உறுதுணையாக இருந்த சன் குழும தலைவர் கலாநிதி மாறனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக வும் ‘நாஸ்தவரம்’ தொடரின் இயக்குநர் திருமுருகன் தெரிவித்தார்.மேலும், தங்களுடைய பல்வேறு முயற்சிகளுக்கு சன் தொலைக்காட்சி ஆதரவு அளித்து வருவதாகவும், இதேபோல பல புதிய சாதனைகள் படைக்க தாங்கள் திட்டமிட்டிருப்பதாகவும் திருமுருகன் தெரிவித்தார்.

சின்ன திரை, திரையுலகம்

‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கில் கமல் சம்பளம் 20 கோடி!…

சென்னை:-மலையாள திரைப்பட வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் சாதனையை எந்தப் படமும் செய்யவில்லை என்ற பெயரைப் பெற்றிருக்கும் படம் தான் மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம்’. அங்கு தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேல் வசூலில் மகத்தான சாதனை புரிந்து வரும் இந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடந்து வந்தது. தெலுங்கு மற்றும் ஹிந்தி உரிமைகள் ஏற்கனவே சோல்ட் -அவுட் ஆகி விட்டது. குறிப்பாக தமிழில் இந்தப் படத்தை ரீமேக் செய்து தயாரித்து, நடிக்க திட்டமிட்ட கமல் அதற்கான பேச்சுவார்த்தையை மோகன்லாலுடன் துபாயில் நடத்தினார்.கன்பார்மாக இந்தப் படத்தோட ரைட்ஸ் உங்களுக்குத்தான் என்று நம்பிக்கை வார்த்தை சொன்னார் மோகன்லால். ஆனால் தற்போது ‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக் உரிமையை கமலின் நண்பரும் நடிகையுமான ஸ்ரீப்ரியாவும், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜியும் இணைந்து பெரிய தொகையை கொடுத்து வாங்கி விட்டார்கள்.தற்போது இந்தப் படத்தை கமல் தயாரிக்கவில்லை. மாறாக மோகன்லால் நடித்த கேரக்டரில் கிட்டத்தட்ட ஹீரோ கேரக்டரில் நடிக்கிறார் கமல்.அதற்கான பேச்சுவார்த்தையும் வெற்றிகரமாக முடிந்து விட்டது. த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கில் நடிப்பதற்காக தொடர்ச்சியாக 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் கமல். அதற்காக அவர் வாங்கியிருக்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? 20 கோடி ரூபாய்.விரைவில் மற்ற ஆர்ட்டிஸ்ட்டுகள் மற்றும் டெக்னீஷியன்களை கம்பார்ம் செய்து விட்டு படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார் டைரக்டர் ஜித்து ஜோசப். என்னதான் கமல் மோகன்லால் கேரக்டரில் நடிக்க முன் வந்தாலும், மலையாள வெர்ஷனில் வரும் மோகன்லாலின் நடிப்புக்கு அது ஈடாகாது என்பதும், தமிழ் ரீமேக்கிலும் மோகன்லாலே நடித்தால் சிறப்பாக இருக்கும் என்பதும் தான் த்ரிஷ்யத்தின் வெற்றி சூத்திரம் தெரிந்தவர்களின் கருத்தாக இருக்கிறது.இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் கமல்?.

Scroll to Top