சிறைப்பறவை நளினி புன்னகையோடு சிறையில் இருந்து வெளியே வந்தார். 28 ஆண்டுகள் ஆகியும் தாமதமாகி கொண்டிருக்கும் இந்திய நீதி 1 மாதம் அவரை கட்டுப்பாடான சுதந்திரத்தில் அனுப்பியிருக்கிறது. நளினி, முருகன் தம்பதிக்கு ஹரித்ரா என்ற மகள் உள்ளார் கொடுமை என்ன வென்றால் இந்த பிரசவம் நடந்ததே சிறையில் தான்.
பெற்றோர் துணையின்றி அவர்களின் அரவணைப்பின்றி தனிமையில் வளர்ந்திருக்கிறார் ஹரித்ரா, நல்ல படிப்பாளி, இங்கிலாந்து நாட்டில் லண்டனில் தங்கி படித்திருக்கிறார். “என் பெற்றோரை மன்னித்து விடுங்கள்” என்று 2014-ல் ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். இவருடைய திருமண ஏற்பாட்டுக்கு தான் நளினி 6 மாதம் நன்னடத்தை தற்காலிக விடுப்பு வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனாலும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து இதை தடுத்துள்ளது. ஆனால் நளினியோ “என் மகளுக்கு இதுவரைக்கும் எந்த ஒரு சம்பிரதாய, சடங்குகளையும் நான் செய்ததே இல்லை” ஒரு சராசரி தாயாக கோர்ட்டில் தன் வாதத்தை கண்ணீருடன் நீதிபதியிடம் எடுத்துரைத்து வாதாடினார். இறுதியில் ஒரே ஒரு மாதத்துக்கான நன்னடத்தை தற்காலிக விடுப்பை நீதிமன்றம் அளித்துள்ளது.
ஏராளமான போலீசார் பாதுகாப்புடன் 30 நாட்கள் கட்டுப்பாடான சுதந்திர காற்றை சுவாசிக்க நளினி வெளியே வந்திருக்கிறார்.
சிறையில் இருந்து வெளியே வந்ததும் சிங்கராயர் வீட்டுக்கு நேரே சென்றார் அவரது அம்மா பத்மாவதி ஆரத்தி எடுத்து, மகளை உள்ளே அழைத்து சென்றார். அங்கே தன் மகளை நளினி கண்டதும் அப்படியே ஆரத்தழுவிக்கொண்டார். கூடவே ஒரு தற்படம் (Selfi – செல்பி ) என சராசரி பெண்கள் அனுபவிக்கும் சிறு சிறு ஆசைகளை அனுபவித்தார். நளினி சிறைக்கு வெளியே தங்கி இருக்கும் நாட்கள் வரை தினந்தோறும் அறிக்கைகள் சிறையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும், ஊடகங்களுக்கு பேட்டி தரக்கூடாது, எப்போதும் கூடவே இருக்க போகும் போலீஸ் பாதுகாப்பு என்று எத்தனையோ கெடுபிடிகளையும் மீறி ஒரு தாயின் மகிழ்ச்சி நளினியின் முகத்தில் தெளிவாக தெரிகிறது
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே