“மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை பகிர்ந்து வருகிறார்கள். பல துறை பிரபலங்கள் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் கலக்கம் அடைந்துள்ளனர்.
மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் மாட்டியிருக்கிறார்.பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியாக இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர்.
அவர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறிவந்தனர் . ஆனால் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் எந்த பதிலையும் அளிக்காமல் மவுனம் காத்துகொண்டு இருக்கிறார்.
அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் , அரசு பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் சமீபத்தில் டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என கூறினார்.
இன்று மாலை அவர் தனது மந்திரி பதவியை எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தார்.
“தனிப்பட்ட முறையில் என்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள விரும்புவதால் எனது பதவியில் இருந்து விலகுகிறேன்” என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே