தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் முழுக்க முழுக்க பொய்யானவை என்று வைரமுத்து வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து தன்னை 2004ஆம் ஆண்டு படுக்கைக்கு அழைத்தார் என புகார் கூறியிருந்தார் .இது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து வைரமுத்து சில நாட்கள் முன் கூறுகையில் ” அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று.
உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்.” என்று கூறியுள்ளார்.இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் கூறினார் வைரமுத்து .அவர் பதிவை ரீட்வீட் செய்த சின்மயி வைரமுத்துவை பொய்யர் என கூறினார்.
மீண்டும் இன்று அவர் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார் .
அதில் “என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. முற்றி உள்நோக்கம் கொண்டது. அது உண்மையாக இருந்தால் சம்பவந்தப்பட்டவர் வழக்கு தொடரட்டும்.”
“சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும் அறிவுலகத்தின் ஆன்றோர்களோடும் கடந்த ஒரு வாரமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன்.”
“நீங்கள் வழக்கு போடலாம், சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா கெட்டவனா என இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும், நீதிக்கு தலை வணங்குகிறேன்” என்றார் வைரமுத்து.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே