டெல்லியில் வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று ரூ. 2 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்றனர் மர்ம நபர்கள்.
டெல்லியில் உள்ள ஒரு கார்பரேஷன் வங்கியின் கிளையில் கேஷியராக பணியாற்றி வருபவர் சந்தோஷ் குமார்(25). இவர் நேற்று மாலை பணி முடிந்து வங்கியை விட்டு வெளியே வந்த போது முகமூடி அணிந்த 6 பேர் கொண்ட கும்பல் இவர் மீது துப்பாக்கியால் சுட்டனர்.
குண்டு தாக்கி ரத்த வெள்ளத்தில் தரையில் சந்தோஷ் குமார் தரையில் விழுந்தார். அவரிடம் இருந்த ரூ. 2 லட்சம் பணத்தை அந்த கும்பல் கொள்ளை அடித்து சென்றது.
இதைத்தொடர்ந்து அங்கே இருந்தவர்கள் சந்தோஷ் குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவரது உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், வங்கி வாசலில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து கொள்ளை கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே