மீண்டும் மோசமான திருமுருகன் காந்தி உடல்நிலை !!

வேலூர் சிறையினில் இருந்த திருமுருகன் காந்தி மயக்கமடைந்தார்.இதனால் அவர் வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார் .கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஐ.நாவில் பேசிவிட்டு வந்த அவரை போலீசார் கைதுசெய்தனர் .அதன்பிறகு அவர் மீது பல்வேறு வழக்குகள் போட்டு போலீசார் சித்தரவதை செய்வதாக அவரது அமைப்பினர் குற்றம் சாட்டினார் .வேலூர் சிறையினில் கடந்த ஒன்றரை மாதமாக உள்ள அவர் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக தெரிகிறது.இதுகுறித்து நாம் ஏற்கனவே எழுதியிருந்தோம்.

இந்நிலையில், இரத்த அழுத்தம் குறைவு காரணமாக கடந்த 23ஆம் தேதி சிறையில் மயங்கி விழுந்தார். 24ஆம் தேதி காலை போலீசார் அவரை வேலூர் அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனை செய்தனர்.அவருக்கு சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாக தெரிவித்தனர். இன்று காலை திருமுருகன் காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மீண்டும் மயங்கி விழுந்தார்.அவருக்கு சிறையில் மருத்துவ உதவி அளிக்கப்பட்டு ,வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அலைச்சல்,சரியான உணவு இல்லாதது,சுகாதாரமின்மையால் அவரது உடல்நிலை மோசமடைந்து வருகிறது,என்று போலீசார் மீது மே 17 இயக்கத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்
.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

செல்வப்பெருந்தகை

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago