பஸ் பாஸ் கட்டணத்தை மாதம் 1000 ரூபாயிலிருந்து 1300 ரூபாயாக உயர்த்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது ,அரசு போக்குவரத்து கழகத்தை லாபகரபாக இயக்க யோசிக்காத அரசு ,இப்படி செய்வதா என திராவிட முன்னேற்ற கழக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார் .
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ” ஏழை-எளிய நடுத்தர மக்கள் பயன்படுத்தி வரும் ‘மாதாந்திர பஸ் பாஸ்’ கட்டணத்தை ரூ.1000 இருந்து ரூ.1300 ஆக அதிகரிக்கும் முயற்சியை உடனே கைவிட வேண்டும்.
ஏற்கனவே, 100%க்கும் மேல் கட்டண உயர்வை அமல்படுத்தி விட்டு,மீண்டும் “சேடிஸ்ட்” மனப்பான்மையோடு அதிமுக அரசு செயல்படுவது கண்டனத்துக்குரியது”
மேலும் அவர் புதிதாக வாங்கப்பட்டுள்ள பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளார் . “முதல்வர் கொடியசைத்து துவக்கி வைக்க வேண்டும் என்பதற்காக புதிதாக வாங்கப்பட்ட 448 பேருந்துகள் இயக்கப்படாமல் “வாரண்டி” காலத்தை இழக்கும் அபாயத்தில் பணிமனைகளில் நின்று கொண்டிருப்பதற்கு மோசமான நிர்வாகமே காரணம்!
கட்டணத்தை உயர்த்த துடிக்கும் அரசு, 448 பேருந்துகளை இயக்காமல் இருப்பது ஏன்?” என கேள்வியெழுப்பியுள்ளார் .
2011ஆம் 50 சதவீத பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது .மேலும் இதே அதிமுக ஆட்சியால் 2018ஆம் ஆண்டு 50 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது.நேரத்துக்கு வராத பேருந்துகள்,ஒரே சமயத்தில் வரும் பல பேருந்துகள்.இதனால் பேருந்து உபயோகிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது என அவர் குற்றம்சாட்டியுள்ளார். உதிரிபாகங்கள் வாங்குவதில் ஊழல்,நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்து கழகம்,நிர்வாக சீர்கேடு ,இதனை பார்க்கும் பொது போக்குவரத்து கழகத்தினை தனியார் மயமாக்க அரசு தயாராகிவிட்டதாக அவர் ஐயம் எழுப்பியுள்ளார். போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்குத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், கட்டண உயர்வு மட்டுமே எங்களுக்குக் கைவந்த கலை என்று அ.தி.மு.க அரசு செயல்படுகிறது என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே