அப்போலோவில் இருந்த பொது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க நிர்வாகம் அனுமதிக்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார் .
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது எழுந்துகொண்டிருக்கிறது .அது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையமும் கடந்த ஒரு வருடமாக விசாரணை மட்டுமே நடத்தி கொண்டிருக்கிறது.எந்த முன்னேற்றமும் இல்லை.சிலநாட்களுக்கு முன்பு ஜெயலலிதா சிகிச்சை எடுத்தபோது அந்த வளாகத்தில் பதிவான CCTV காட்சிகள் அழிந்துவிட்டன என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் கூறியது.இன்று பேட்டியளித்த அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் சசிகலா மீது சந்தேக கேள்விகளை எழுப்பியுள்ளார் .அவர் கூறுகையில் ” மயக்கமான நிலையில் தான் ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் .ஆனால் ,மயக்கமடையவில்லை என சசிகலா கூறுகிறார்.மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன் ஏன் காவல்துறை,உளவுத்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை .போயஸ் கார்டனில் வேலை பார்க்கும் இரண்டு பணி பெண்களும் ஏன் விசாரிக்கப்படவில்லை “என கேள்வியெழுப்பியுள்ளார் .
இந்நிலையில் ,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அப்பல்லோ நிர்வாகம் மீது சந்தேகமும்,குற்றச்சாட்டும் எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில் ” அம்மாவை பார்க்க எவ்வளவோ முயற்சி செய்தேன்,என்னை அனுமதிக்கவில்லை .அமெரிக்காவிற்கு கொண்டு சிகிச்சையளிக்கிறோம் என கூறினேன்.அதற்கு அவர்கள் எங்கள் சிகிச்சை மீது நம்பிக்கை இல்லையா என சமாளித்தனர் ” என கூறியுள்ளார் .ஏற்கனவே அப்போலோ மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில்,துணை முதல்வரின் குற்றச்சாட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . விசாரணை துடங்கியது முதல் சசிகலா தரப்பும் ,அப்போலோ தரப்பும் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவிக்கிறார்கள்.இதன் மூலம் சசிகலாவுடன் இணைந்து அப்போலோ நிர்வாகமும் ஏதேனும் நாடகம் அரங்கேற்றியதா என மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே