மிகவும் விரும்பப்படும் நாயகன் பட்டியிலில் நடிகர் அஜித் முதல் இடம்!…

சென்னை:-ஐடைம்ஸ் என்ற இணையதளம் ஒவ்வொரு வருடமும் மிகவும் விரும்பப்படும் நாயகன் என்ற பட்டத்திற்கு தகுதியான நபர்களை இணையதள வாக்கெடுப்பு மூலமாக தேர்ந்தெடுப்பது வழக்கம். வாக்கெடுப்பின் அடிப்படையில் 25 பேர் கொண்ட பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் 2014-ம் ஆண்டின் மிகவும் விரும்பப்படும் நாயகன் என்ற பட்டியலில் நடிகர் அஜித் குமார் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஓபனிங் கிங், பிரபல இயக்குனர்களின் விருப்பம், ரசிகர்களின் ஆதரவு என்று ஆல் ஏரியாவிலும் ரவுண்ட் கட்டி அடிக்கும் அஜித் 2013-ம் ஆண்டு இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருந்தார். தற்போது முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் சூர்யா தொடர்ந்து 2-ம் இடத்திலேயே இருக்கிறார். 3-ம் இடத்தில் தனுஷ், தனுஷுக்கு அடுத்த இடத்தில் விக்ரம் இருக்கிறார். சென்ற வருடம் 5-ம் இடத்தில் இருந்த விஜய், தற்போது 8-வது இடத்திற்கு இறங்கியுள்ளார்.

25-வது இடத்தில் இருந்த அதர்வா ‘இரும்புக்குதிரை’யில் சிக்ஸ் பேக் வைத்த ஸ்டைலிஷ் லுக்கில் தேறி 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுதவிர துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் போன்ற புதுமுகங்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago