செய்திகள்,திரையுலகம் மிகவும் விரும்பப்படும் நாயகன் பட்டியிலில் நடிகர் அஜித் முதல் இடம்!…

மிகவும் விரும்பப்படும் நாயகன் பட்டியிலில் நடிகர் அஜித் முதல் இடம்!…

மிகவும் விரும்பப்படும் நாயகன் பட்டியிலில் நடிகர் அஜித் முதல் இடம்!… post thumbnail image
சென்னை:-ஐடைம்ஸ் என்ற இணையதளம் ஒவ்வொரு வருடமும் மிகவும் விரும்பப்படும் நாயகன் என்ற பட்டத்திற்கு தகுதியான நபர்களை இணையதள வாக்கெடுப்பு மூலமாக தேர்ந்தெடுப்பது வழக்கம். வாக்கெடுப்பின் அடிப்படையில் 25 பேர் கொண்ட பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் 2014-ம் ஆண்டின் மிகவும் விரும்பப்படும் நாயகன் என்ற பட்டியலில் நடிகர் அஜித் குமார் முதல் இடத்தை பிடித்துள்ளார். ஓபனிங் கிங், பிரபல இயக்குனர்களின் விருப்பம், ரசிகர்களின் ஆதரவு என்று ஆல் ஏரியாவிலும் ரவுண்ட் கட்டி அடிக்கும் அஜித் 2013-ம் ஆண்டு இந்த பட்டியலில் 3-வது இடத்தில் இருந்தார். தற்போது முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் சூர்யா தொடர்ந்து 2-ம் இடத்திலேயே இருக்கிறார். 3-ம் இடத்தில் தனுஷ், தனுஷுக்கு அடுத்த இடத்தில் விக்ரம் இருக்கிறார். சென்ற வருடம் 5-ம் இடத்தில் இருந்த விஜய், தற்போது 8-வது இடத்திற்கு இறங்கியுள்ளார்.

25-வது இடத்தில் இருந்த அதர்வா ‘இரும்புக்குதிரை’யில் சிக்ஸ் பேக் வைத்த ஸ்டைலிஷ் லுக்கில் தேறி 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதுதவிர துல்கர் சல்மான், கவுதம் கார்த்திக் போன்ற புதுமுகங்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி