இதையடுத்து களமிறங்கிய ஆதித்ய டாரே, ரோகித்தின் அதிரடிக்கு துணை நின்றார். அணியின் ஸ்கோர் 37ஐ தொட்டபோது டாரே 7 ரன்னில் அவுட் ஆனார்.அதன்பின்னர் ரோகித் சர்மா-ஆண்டர்சன் ஜோடி பொறுப்புடன் ஆடியதால் ஸ்கோர் உயர்ந்தது. ரோகித் சர்மா அரை சதம் விளாசி, தனது அதிரடியைத் தொடர்ந்தார். மறுமுனையில் ஆண்டர்சனும் தனது பங்கிற்கு பந்துகளை பவுண்டரி, சிக்சர்களாக விளாசி அரை சதம் அடித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 98 ரன்களுடனும், ஆண்டர்சன் 55 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துவக்க வீரர்களாக ராபின் உத்தப்பா, காம்பீர் களமிறங்கினர். ராபின் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து களமிறங்கிய பாண்டே, கம்பீருடன் இனைந்து அதிரடியாக விளையாடினார். 24 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 40 ரன் எடுத்த பாண்டே, ஹர்பஜன் சிங் வீசிய 12-வது ஓவரின் கடைசி பந்தில் போலார்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் அப்போது 98 ஆக இருந்தது.
பின்னர் களமிறங்கிய யாதவ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுபக்கம் காம்பிர் அதிரடியாக ஆடி 50 ரன்களைக் கடந்தார். 43 பந்துகளில் 57 ரன் எடுத்த அவர் பும்ராவின் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் அப்போது 121 ஆக இருந்தது.அடுத்து களமிறங்கிய பதானும் களத்தில் இருந்த யாதவும் அதிரடியாக ஆடி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். 20 பந்துகளில் 5 சிக்சர், 1 போர் உட்பட 46 ரன் எடுத்து யாதவ் அசத்தினார். 20 ஓவர் முடிய 9 பந்துகள் மீதமிருந்த நிலையில் 170 ரன்களைக் குவித்து சொந்த மண்ணில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. தனது மகனுடன் போட்டியை ரசித்த ஷாரூக் கான் வெற்றிக்களிப்பில் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே