30-45 வயதுக்குட்பட்டவர்களை தேடித் தாக்கும் பன்றிக் காய்ச்சல்: திடுக்கிடும் தகவல்!…

புது டெல்லி:-எச்1என்1 என்ற வைரசால் ஏற்படும் பன்றிக்காய்ச்சல் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது தீவிரமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் அசுர வேகத்தில் பரவியபடி உள்ளது. 17-ம் தேதி நிலவரப்படி இந்நோய்க்கு 1,809 பேர் பலியாகியுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் நோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட ஒரு ஆய்வு அறிக்கையின்படி, 30-45 வயதுக்குட்பட்ட நபர்கள் இந்த நோயின் தாக்கத்துக்கு அதிகம் ஆளாகி வருவதாகவும், இதுவரை இறந்தவர்களில் 34 சதவீதம் பேர் இந்த வயதுக்குட்பட்டவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த வயது பிரிவினரை அடுத்து, 45-60 வயதுக்குட்பட்ட நோயாளிகளில் 32 சதவீதம் பேர் பலியாகியுள்ளனர்.

60 வயதுக்கும் மேற்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 12 சதவீதம் ஆகவும், ஒரு மாத குழந்தை முதல் 12 வயதுக்குட்பட்டவர்களின் பலி எண்ணிக்கை 4 சதவீதமாகவும், 12-18 வயதுக்குட்பட்டவர்களின் பலி எண்ணிக்கை ஒரு சதவீதமாகவும் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோல், இதுவரை பலியானவர்களில் 50.35 சதவீதம் நோயாளிகள் பெண்கள் என்றும் 49.65 சதவீதம் பேர் ஆண்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago