அவர் ரன் எடுக்க ஓடிவருவதை கவனிக்காத கெயில் க்ரீசிலேயே நின்றார். இதனால் கெயிலுக்கு அருகே வரை வந்த சாமுவேல்ஸ் மீண்டும் தான் புறப்பட்ட இடத்துக்கே ஓடினார். ஆனால் அதற்குள் சூப்பராக செயல்பட்ட கோலி சாமுவேல்சை ரன் அவுட்டாக்கினார். எனினும் 8வது ஓவரின் 3வது பந்தை பவுண்டரிக்கும், 5வது பந்தை சிக்சருக்கும் விரட்டி அசத்தினார் கெய்ல். அடுத்த ஓவரின் கடைசி பந்தில் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டீப் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் கெயில். அடுத்து வந்த ராம்தின் சந்தித்த முதல் பந்திலேயே போல்டானார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 35 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. இதையடுத்து கார்ட்டரும், சிம்மன்சும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுமையாக விளையாடினர். எனினும் 19வது ஓவரை வீசிய மோகித் சர்மா சிம்மன்சை 9 ரன்களில் அவுட்டாக்கினார். 22வது ஓவரில் கார்ட்டரை 21 ரன்னில் அவுட்டாக்கினார் அஷ்வின். அடுத்து வந்த ரஸ்ஸல் வந்த வேகத்தில் 8 ரன்னுக்கு அவுட்டானார். இதனால் 85 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலைக்கு சென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.
இந்நிலையில் கேப்டன் ஹோல்டரும், டேரன் சமியும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ஒன்றிரண்டு ரன்களாக அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தி வந்தனர். இந்திய அணி வீரர்கள் மேற்கொண்டு விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர். 10 ஓவர்களுக்கும் மேலாக தாக்குப்பிடித்து விளையாடிய இந்த ஜோடியை ஷமி பிரித்தார். ஷமி வீசிய 36வது ஓவரில் 26 ரன்கள் எடுத்திருந்த சேமி கேப்டன் தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் அதிரடியாக ஆட ஆரம்பித்தார். ஜடேஜா வீசிய 37வது ஓவரில் சிக்சரையும், ஷமி வீசிய 38வது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்சரையும் விளாசிய ஹோல்டர், 42வது ஓவரின் 2வது பந்தில் 50 ரன்களை பூர்த்தி செய்தார். அந்த ஓவரின் கடைசி பந்தில் டெய்லர் 11 ரன்னுக்கு அவுட்டானார்.
45வது ஓவரில் ஹோல்டர் தூக்கியடித்த பந்தை நழுவவிடாமல் கேட்ச் பிடித்த கோலி, வெஸ்ட் அணி 182 ரன்னுக்கு ஆல் அவுட் ஆக வழி செய்தார். குறைவான ரன்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆட்டமிழந்த போதிலும், அந்த அணி வீரர்கள் கொடுத்த கேட்ச்சை இந்திய வீரர்கள் உமேஷ், ரோகித், ஜடேஜா ஆகியோர் தவறவிட்டது குறிப்பிடத்தக்கது. வெற்றிக்கு 183 ரன்கள் தேவை என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே