அமெரிக்காவில் இந்திய யோகா குரு மீது 6 பெண்கள் கற்பழிப்பு புகார்!…

லாஸ் ஏஞ்சல்ஸ்:-அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய யோகா கல்லூரி என்ற பெயரில் யோகா கல்லூரி நடத்தி வருபவர், யோகா குரு பிக்ரம் சவுத்ரி (வயது 69). இந்திய அமெரிக்கரான இவரது பூர்வீகம் கொல்கத்தா. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் யோகா குரு பிக்ரம் சவுத்ரி, தன்னிடம் யோகா கற்க வந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, 6 பெண்களை இந்தியா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைத்து கற்பழித்து விட்டதாக அமெரிக்காவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

சமீபத்தில் இவர் மீது 6-வது வழக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் சுபீரியர் கோர்ட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜில் லாலர் என்ற கனடா பெண் கடந்த் 13 ந்தேதி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவர் முதலில் யோகா பயிற்சி பெற்று, பின்னர் அவரது நிறுவனத்தில் பயிற்சியாளராக பணியாற்றியவர்.
இவர் தன்னை பிக்ரம் சவுத்ரி பலமுறை கற்பழித்ததாகவும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விளக்கம் அளித்து தனது செயலை நியாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

ஆனால், பிக்ரம் சவுத்ரி மீதான இந்தக் குற்றச்சாட்டுகளை அவரது வக்கீல்கள் மறுத்துள்ளனர். பல்லாண்டு காலம் ரகசியமாக வைத்து விட்டு, இப்போது அந்தப் பெண்கள் தாமாக தனிப்பட்ட முறையில் தங்கள் குற்றச்சாட்டுகளுடன் வரவில்லை. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் உலகளாவிய ஆதரவு திரட்டி விட்டு புகார் கூறி உள்ளனர். நிதி ஆதாயம் பெறுவதற்காக சட்டத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தி உள்ளனர் என வக்கீல்கள் கூறுகின்றனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago