நெதர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான ‘மார்ஸ் ஒன்’ அமைப்பு, இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி பயணம் மேற்கொள்ளும் தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதற்கான அறிவிப்பு வெளியான உடனே, உலகம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய் பயண திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம். இது ஒரு வழி பயணம் ஆகும். செவ்வாய் கிரகத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்தால் அங்கு இருந்து திரும்பி வர முடியாது. இந்த வினோத பயணத்திற்காக உலகம் முழுவதும் இருந்து விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து 3 சுற்று சோதனைகள் நடத்தி, 50 ஆண்கள், 50 பெண்கள் கொண்ட 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவில் இருந்து 39 பேர், ஐரோப்பியர் 31, ஆசியாவில் இருந்து 16, ஆப்பிரிக்கா மற்றும் ஓசியானியாவில் இருந்து தலா 7 பேர் அடங்குவர்.
இந்த பட்டியலில் புளோரிடாவில் ஆய்வுக்கல்வி பயின்று வரும் தரண்ஜீத் சிங் (வயது 29), துபாயில் வசித்து வரும் ரித்திகா சிங் (29), கேரளாவை சேர்ந்த இளம்பெண் சாரதா பிரசாத் (19) ஆகிய 3 இந்தியர்களும் இடம் பெற்றுள்ளனர். முன்னதாக 2-வது சுற்றின் முடிவில் 44 இந்தியர்கள் (17 பெண்கள்) உள்பட 660 பேர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் மார்ஸ் ஒன் நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி நார்பர்ட் கிராப்ட் நடத்திய தனிப்பட்ட ஆன்லைன் நேர்காணலில் 100 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
இது குறித்து நார்பர்ட் கூறுகையில், எவ்வளவு வலிமையான பங்கேற்பாளர்கள் இந்த நேர்காணலில் பங்கு பெற்றிருக்கிறார்கள்?… உண்மையிலேயே நாங்கள் அசந்துபோனோம். இந்த தேர்வு மிகவும் கடினமாக இருந்தது என்று கூறினார். தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இன்னும் சில கடினமான சோதனைகள் நடத்தப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும். அந்த பட்டியலில் இடம் பிடிப்போருக்கு 7 ஆண்டுகள் விண்வெளி பயிற்சி அளிக்கப்படும். பின்னர் 2024ம் ஆண்டு முதல் 4 பேர் வீதம் அவர்கள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். அந்த இறுதிப்பட்டியலில் இந்தியர்கள் இடம் பெறுவார்களா… என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே