இந்த விஷயத்தை அவர் தனது நண்பர்களிடம் சொல்ல, அவர்களும் உடனடியாக பண்ணைக்கு வந்து அந்த அதிசய பன்றிக்குட்டியைப் பார்வையிட்டு ஆச்சர்யமடைந்தனர். சில தினங்களுக்குள் இது தொடர்பான செய்தி நன்னிங் நகரம் முழுவதும் பரவியது. இதையறிந்த ஒரு சீன நாளிதழ் அந்தக் குட்டிப் பன்றியின் புகைப்படத்தோடு சிறப்பு செய்திக் கட்டுரை வெளியிட்டது. அந்த செய்தி நாடு முழுவதும் காட்டுத்தீயாகப் பரவியது. இதில் பூரிப்படைந்த டாலு அந்த அதிசயக் குட்டியை பண்ணைக்குள் காட்சிப் பொருளாக வைத்து, பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்து குறுகிய காலத்தில் கோடீஸ்வரனாகிவிடலாம் என எண்ணினார்.
இதற்கிடையே, தூங்கக் கூட நேரமில்லாமல் டாலுவுக்கு தொடர்ந்து போன் கால்கள் வந்து கொண்டே இருந்தது. அந்தக் குட்டிப்பன்றியை வாங்குவதற்காக பெரிய போட்டியே நடந்தது. அந்தக் குட்டி எனக்கு வேண்டும் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என அவருக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களும், அறிமுகமில்லதவர்களும் வலை வீசத் தொடங்கினர். இரண்டு தலைமுறைக்கு பன்றிப்பண்ணையைப் பராமரித்தால் எவ்வளவு வருமானம் கிடைக்குமோ..? அதைவிட இரட்டிப்பு விலைக்கு அந்தக் குட்டியை வாங்கிக் கொள்ள பலர் தயாராக இருந்தனர். இதனால் தனது குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதற்கும் போதுமான பணம் கிடைக்கும் என்பதால் அந்தக் குட்டியை காட்சிக்கு வைத்து பணம் சம்பாதிக்கும் முடிவை டாலு கை விட்டார்.
ஆனால், எதிர்பராதவிதமாக அந்தக் குட்டியை தாய் பன்றி சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டது. அதற்கு தாய்ப்பால் கொடுக்கவும் முரண்டு பிடித்தது. இதர குட்டிகளைப் போலன்றி மனித சாயலில் அதன் முகம் இருப்பதால் தாய் பன்றி அதை ஒதுக்கித் தள்ளுவதையறிந்த டாலு கொடுத்த புட்டிப்பாலையும் அந்த குட்டி குடிக்க மறுத்துவிட்டது. இதனால், சில நாட்களில் அது பரிதாபமாக உயிரிழந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே