அமெரிக்காவில் இருந்துவந்த லின்ட்சே ஆதம்ஸ் (வயது 22), லெஸ்லீ (20) ஆகிய இரு சகோதரிகளும் கோவில் வளாகத்தில் ஒருவரை ஒருவர் உடலில் எந்தவொரு உடையும் இன்றி நிர்வாணமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த சகோதரிகள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. தாங்கள் செய்தது தவறுதான் என அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். கடந்த 15 நாளில் இந்தக் கோவில் வளாகத்தில் இப்படி நிர்வாணப்படம் எடுத்துக்கொண்டவர்கள் பிடிபடுவது இது 2-வது முறை.
இந்தக் கோவில் வளாகத்தில் இப்படி நிர்வாணப்படம் எடுத்துக்கொண்ட பிரெஞ்சு சுற்றுலாப்பயணிகள் பிடிபட்டனர். அவர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். உடனே அவர்கள் நாடு கடத்தப்பட்டு விட்டனர். கோவில் நிர்வாகத்தை கவனிக்கிற அப்சரா ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் சாவ் சன் கெர்யா, இதுபற்றி கருத்து தெரிவிக்கையில், அவர்களுக்கு இந்தக் கோவில் வளாகம் எந்தளவு புனிதமானது என தெரியாது. ஆனால் அவர்களது தரக்குறைவான செயல்கள், கோவிலின் புனிதத்தன்மையை பாதிக்கிறது என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே